கடந்த சில நாட்களுக்கு முன் திமுக சார்பில் மு.கருணாநிதி அவர்களின் கனவு இதழான தி ரைசிங் சன் என்ற ஆங்கில நாளிதழ் முக.ஸ்டாலின் தலைமையில் வெளியிடப்பட்டது. இதன் பொறுப்பாளராக கான்ஸ்டன்டைன் என்பவர் நியமிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த வெளியீட்டு விழாவில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பல திமுக தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் முக ஸ்டாலின் ஒன்றுவிட்ட சகோதரியான எம்பி கனிமொழி மட்டும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து அழைப்பு வரவில்லை என கனிமொழி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் தரப்போ அழைப்பு அனுப்பியும் கனிமொழி கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றதும் அனைவரும் நேரில் வந்தும் தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் வாழ்த்து அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு சில நாட்கள் கழித்தே கனிமொழி நேரில் வந்தார் என கூறுகிறது.
மேலும் கிஷோர் கே சாமி கனிமொழி ஆதரவாளர் என கூறப்படுகிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என கனிமொழி கூறியும் ஸ்டாலின் குண்டாஸில் சிறையிலடைத்தது கனிமொழிக்கு வருத்தம் என ஊகங்கள் உலவுகிறது.
மேலும் திமுகவின் பல நடவடிக்கைகளில் கனிமொழி தரப்பு ஒதுங்கியே இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் யாரும் கனிமொழியை கண்டுகொள்வதில்லை. மேலும் அவர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளை கேட்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து துரைமுருகன் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் மூத்த நிர்வாகிகள் அணி புதியவர்கள் அணி மற்றும் கனிமொழி அணி என மூன்றாக பிரிந்துகிடப்பதாக கட்சித் தொண்டர்களே புலம்பிவருகின்றனர்.
#therisingsun #dmk #kanimozhi