Tuesday, December 6, 2022
Home > அரசியல் > 22 எம்.எல்.ஏக்கள் மிஸ்ஸிங்..! ஆட்சியை கைப்பற்றுகிறதா பிஜேபி..?

22 எம்.எல்.ஏக்கள் மிஸ்ஸிங்..! ஆட்சியை கைப்பற்றுகிறதா பிஜேபி..?

மஹாராஷ்டிரா : இந்திய குடியரசுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மஹாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள பூகம்பம் ஒட்டுமொத்த இந்தியாவையும் மஹாரஷ்டிராவின் பக்கம் திரும்பியிருக்கிறது. உத்தவ் தாக்கரே இன்று மதியம் ஒரு மணிக்கு கேபினட் அமைச்சர்களுடன் அவசர சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.



நேற்று முன்தினம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின்னர் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஐந்து இடங்களில் பிஜேபியும் ஐந்து இடங்களில் சிவசேனா காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் தான் மஹாராஷ்டிரா நகர்ப்புற அமைச்சரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்கள் 21 பேருடன் தலைமறைவாகியுள்ளார்.

`

ஏக்நாத் ஷிண்டே குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து சிவசேனா தலைமை அவரை போனில் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஷினேடேவுடன் சேர்த்து தலைமறைவாகியுள்ள 22 பேரில் ஐந்து அமைச்சர்களும் அடங்குவர்.

இதனால் ஆட்சி கவிழும் அபாயம் இருப்பதால் முதல்வர் உத்தவதாக்கரேவின் அந்தரங்க காரியதரிசியான மிலிந்த் நாவேகர் மற்றும் எம்.எல்.சி ரவீந்திர படக் இருவரும் சூரத் சென்று லெமெரிடியன் ஹோட்டலில் ஷிண்டேவை சந்தித்தனர். ஆனால் அவர் எந்தப்பிடியும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில் குஜராத் மாநில பிஜேபி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சஞ்சய் குதேவும் லீ மெரிடியன் ஹோட்டலில் ஷிண்டேவை சந்தித்தார்.



பிஜேபியுடனான இந்த சந்திப்பு அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. இதுகுறித்த கேள்விக்கு சஞ்சய் இது ஒரு வழக்கமான சந்திப்புதான். மஹாரஷ்டிராவில் நிலவும் சூழலை பிஜேபி உன்னிப்பாக கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மதியம் ஒரு மணிக்கு கேபினட் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

மேலும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா குழுத்தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதால் ஆட்சி கவிழும் அபாயம் அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.