Thursday, March 28, 2024
Home > அரசியல் > களமிறங்கிய முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்..! பதறும் எதிர்க்கட்சிகள்..! சூடுபிடித்த தேர்தல்களம்..!

களமிறங்கிய முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்..! பதறும் எதிர்க்கட்சிகள்..! சூடுபிடித்த தேர்தல்களம்..!

25-1-22/10.45am

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசத்தில் பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சமாஜ்வாடி பிஜேபி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவித்துள்ளன.

உத்திரபிரதேசத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் மதம் சாதி என குறிவைக்கப்பட்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சாதிரீதியாக மதரீதியாக பிளவுபடுத்தி வாக்குவங்கிகளை கைக்கொண்டிருந்தனர். இந்த 2022 தேர்தல் உத்திரபிரதேசத்தில் மாநில வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுயசார்பு பொருளாதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி பிஜேபி களம் காண்கிறது.

இது சமாஜ்வாடி காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. பெண்களின் வளர்ச்சி பெண்களுக்கு இடஒதுக்கீடு என்கிற மந்திரத்தை கையிலெடுத்த காங்கிரஸ் தனது சொந்த மாநிலத்தில் பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க தவறியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இஸ்லாமிய பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் வீடுவீடாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் உத்தியை கையிலெடுத்துள்ளது.

`

யோகியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பெற்றிருக்கும் நலத்திட்டங்கள் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்டவற்றை பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் கூற இருக்கிறது. இது இஸ்லாமிய வாக்குகளை பிஜேபிக்கு இழுக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே காங்கிரசால் சூயர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்பூர் மன்னர் வம்சத்தை சேர்ந்த ஹைதர் அலிகான் பிஜேபி கூட்டணியான அப்னா தளத்தில் சேர்ந்து காங்கிரசுக்கு ஷாக் அளித்துள்ளார். மேலும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பி ஆஸம்கானின் மகன் அப்துல்லா ஆஸம் இதே சூயர் தொகுதியில் நிற்கவைக்கப்படலாம் என்ற யூகம் எழுந்துள்ள நிலையில் ஹைதர் அலிகான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது சமாஜ்வாடிக்கு பின்னடைவு என கூறப்படுகிறது.

```
```

மாயாவதி தலித் வாக்குகளையும் சமாஜ்வாடி இஸ்லாமிய வாக்குகளையும் குறிவைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் பிஜேபி வேட்பாளர்கள் மாநில வளர்ச்சி வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட காரணிகளை தேர்தல் பிரச்சார முழக்கமாக களமிறங்கியுள்ளனர்.

…உங்கள் பீமா