5-4-22/16.00PM/ UPDATED 6-4-22/15.03PM
கர்நாடகா : கடந்த வாரம் அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் மசூதியில் ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என ராஜ்தாக்கரே கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக சிவசேனா அரசின் மீது குற்றம்சுமத்தப்பட்டது.
“ஒலிபெருக்கிகளை அகற்ற கோரி கோவில்கள் மசூதிகள் உட்பட 310 க்கும் அதிகமான வழிபாட்டுதலங்களுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது”
இந்த சர்ச்சைகளில் தற்போது மீண்டும் கர்நாடக அரசு சிக்கியுள்ளது. ஏற்கனவே ஹிஜாப் சர்ச்சை எழுந்து தற்போது அது ஓய்ந்திருக்க ஒலிபெருக்கி சர்ச்சை மீண்டும் பரபரப்புக்கு அடிக்கோலிட்டுள்ளது. கர்நாடக அமைச்சரான கே.எஸ்.ஈஸ்வரப்பா “மாநிலத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்த கவலைகளுக்கு தீர்வு காணவேண்டும்.” என கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை “இது தனிப்பட்ட நபரின் கருத்து அல்ல. இது உயர்நீதிமன்ற உத்தரவு. நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எல்லாவற்றையும் மக்களிடம் விளக்கி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இது மசூதிகளுக்கு மட்டுமல்ல. அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்தும் ” என கூறினார்.
மேலும் மஹாராஷ்டிராவில் கோவில்களுக்கு இலவச ஒலிபெருக்கிகள் வழங்க தயாராக இருப்பதாக ராஜ்தாக்கரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அடுத்த வருடம் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தற்போது எழுந்துள்ள ஒலிபெருக்கி சர்ச்சை உன்னிப்பாக கவனிக்கப்படுவதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல்களுக்கு படிக்க
https://www.madrastelegram.com/remove-loud-speakers-or-play-hanuman-salisa/
….உங்கள் பீமா