1-11-21/11.55am
தமிழக திமுக அரசு பெரியார் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறி அரசு ஊழியர்களை சிரமத்தில் ஆழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் பெரியார் கொள்கையில் ஈடுபாடுள்ளவர் மட்டுமல்லாது அதை தன் வாழ்வில் கடைப்பிடிக்க கூடியவர். எந்த இந்துக்களின் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல மாட்டார். எந்த கோவிலுக்கும் செல்லமாட்டார். பகுத்தறிவே வாழ்வை மேம்படுத்தும் என்ற சீரிய கொள்கையுடையவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.
ஆனால் மாற்று மத பண்டிகை எதுவானாலும் ஓடிச்சென்று முதல் ஆளாகவாழ்த்து சொல்லி விருந்தோம்பல் செய்து மதச்சார்பின்மையை நிலைநாட்டுபவர் நமது முதல்வர். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் ஈ.வே.ராமசாமி எனும் பெரியார் பிறந்தநாளில் பகுத்தறிவு உறுதிமொழி எடுக்கவேண்டும் என அரசு ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பணிமுதிர்வு தருவாயில் இருக்கும் ஒரு அரசு அதிகாரி கூறுகையில் ” லஞ்சம் வாங்க மாட்டோம் வேண்டும் கடமையை சரியாக செய்வோம் என்றும் உறுதி மொழி எடுக்கலாம். நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடலாம். இதுவே பகுத்தறிவு. ஆனால் ஆத்திகத்தை கடைப்பிடிக்கும் ஊழியர்களை இப்படி உறுதிமொழி எனும் பெயரில் அரசு கட்டாயப்படுத்துவது வெறுப்பையே உண்டாக்கும்.
பல ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். தமிழக தலைமைக்கு இதுகுறித்து விரைவான மனு ஒன்றை தலைமை செயலகத்தில் அளிக்க இருக்கிறோம்” என தெரிவித்தார். திமுக தலைவர் ஆ.ராசா ஒரு கூட்டத்தில் பேசுகையில்,
பெரியாரை ஏற்றுக் கொள்ளாத அரசு ஊழியர்களை கூட ஏற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டை ஏற்படுத்தியது நமது முதல்வர்” என கூறியிருக்கிறார்.
…..உங்கள் பீமா
ஆராசா #பெரியர்தினம் #திமுக #அரசுஊழியர்கள் #periyar #dmk #arasa #mkstalin