Thursday, March 28, 2024
Home > செய்திகள் > நேருக்கு நேராக ரயில்கள்..! பயணம் செய்த மத்திய அமைச்சர்..! பரபரப்பு வீடியோக்கள்..!

நேருக்கு நேராக ரயில்கள்..! பயணம் செய்த மத்திய அமைச்சர்..! பரபரப்பு வீடியோக்கள்..!

5-3-22/10.21am

செகுந்தராபாத் : நேருக்கு நேராக ஒரே தண்டவாளத்தில் பயணித்த ரயில்களில் ஒன்றில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினியும் ரயில்வே இயக்குனரும் பயணித்த சில்லிடவைத்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது.

மத்தியில் பிஜேபி ஆட்சிப்பொறுப்பேற்றபின்னர் விபத்தில்லா ரயில்வேயை உருவாக்க முயடர்ச்சி செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக கவச் என அழைக்கப்படும் கவசம் எனும் பொருள் கொண்ட அமைப்பை இந்திய ரயில்வேத்துறை உருவாக்கியுள்ளது. ATP எனப்படும் தானியங்கி அமைப்பு பூஜ்ய விபத்தை உறுதிப்படுத்துகிறது.

இதன் சோதனை ஓட்டம் செகுந்தராபாத்தில் நேற்று நடைபெற்றது. சனத் நகர் சங்கர்பள்ளி ஓடுபாதையில் ஒரு ரயிலில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினியும் மற்றொரு ரயிலில் ரயில்வேத்துறை இயக்குனரும் பயணித்தனர். இரு ரயில்களும்வேகமாக நேருக்கு நேர் வந்தன. இதைக் கவனித்துக்கொண்டிருந்த அனைவரும் பதறிக்கொண்டிருந்தனர். சரியாக 350 மீட்டர் தூரத்தில் ரயில்கள் தானாக நின்றன. பரிசோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக அடுத்து அறிவிக்கப்பட்டது.

`

உலகிலேயே மிக குறைந்த செலவில் விபத்து தடுப்பு அமைப்பு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக ரயில்வேத்துறை அமைச்சர் மாற்று அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு கிலோமீட்டருக்கு 50 லட்சம் செலவாகிறது. ஆனால் மற்ற நாடுகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 கோடி வரை செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

இந்த சாதனை மத்திய அரசின் மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் வெகுவிரைவில் இந்தியாவெங்கும் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

….உங்கள் பீமா