Tuesday, April 22, 2025
Home > அரசியல் > அவர் வெடிச்சது புஸ்வானம்..! நான் வைக்கப்போவது அணுகுண்டு..! அதிரடி காட்டிய பிஜேபி தலைவர்..!

அவர் வெடிச்சது புஸ்வானம்..! நான் வைக்கப்போவது அணுகுண்டு..! அதிரடி காட்டிய பிஜேபி தலைவர்..!

1-11-21 / 12.50pm

அவர் வெடிச்சது சாதாரண புஸ்வானம் தான். ஆனால் தீபாவளி முடிந்த பிறகு நான் அணுகுண்டே வெடிக்கப்போகிறேன் என பிஜேபி தலைவர் தற்போது பேட்டியளித்து வருகிறார்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா காங்கிரஸ் மற்றும் NCP கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலை கொள்ளை ஆட்கடத்தல் என சமூக குற்றங்கள் பெருகிவருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நிறுத்திய வழக்கிலும் ஒப்பந்தகாரர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கிலும் மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் மும்பை கமிஷனர் பரம்பிர் சிங் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இதில் அனில் தேஷ்முக் தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் NCP நவாஸ் மாலிக் அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவைப்பற்றும் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

`

இதற்க்கு பதிலடியாக தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் முன்னாள் முதல்வரும் தற்போதைய பிஜேபி தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ் ” நவாஸ் மாலிக் வெடிப்பது சீனிப்பட்டாசு புஸ்வானம் தான. தீபாவளி கழித்து நான் வெடிக்கப்போவது அணுகுண்டு. நவாப் மற்றும் சரத் பவார் குறித்த ஆவணங்களை தீபாவளி முடிந்த சில நாட்களில் வெளியிட இருக்கிறேன்” என பேட்டியளித்துள்ளார்.

```
```

சரத் பவார் மீது கூட்டுறவு வங்கி ஊழல் குற்றசாட்டுகள் இருப்பதும் அந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

…..ஸ்டீபன் தங்கதுரை

தேவேந்திரபட்னாவிஸ் #மஹாராஷ்டிரா #பிஜேபி #சிவசேனா #சரத்பவார் #mumbai #saratbawar #ncp #uthavthackrey