26-11-21/15.30PM
ஸ்ரீபெரும்புதூர்; ஸ்ரீபெரும்புத்தூர் தாலுகா காஞ்சிபுரம் மாவட்டம் கிழாய் கிராமத்தில் பத்துவருடங்களுக்கும் மேலாக உள்ள கனகாம்பரேஸ்வரர் கோவில் தற்போது தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் தொடர்ந்து இந்துக்களின் கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. மதுரை கோயம்புத்தூர் திருச்செங்கோடு நாமக்கல் கட்டாயம் தென்காசி என பல இடங்களில் கோவில்கள் அடுத்து தரைமட்டமாக்கப்பட்டும் யாராலும் அரசை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியவில்லை. அதிமுக பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் பக்தர்களுக்கு துணை நிற்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பிவருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிழாய் கிராமத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கனகாம்பரேஸ்வரர் பொதுமக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த இடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இடித்து தகர்க்க உத்தரவிட்டார். இன்று காலை 11 மணிக்கு மேல் கிழாய் கிராம கோவிலுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அங்கிருந்த DRO பன்னீரிடம் இடித்து தள்ள கட்டளையிட்டார்.
கிராம மக்கள்கண்ணீர் விட்டு கதறினர். அவர்களை DRO பன்னீர் அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் திமுக அரசின் ஆணைப்படி கோவில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்க்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் இந்துக்கள் இழக்கும் மற்றுமொரு கோவில் என பக்தர்கள் நொந்து போய் கூறினர்.
மேலும் அதிமுகவை சேர்ந்த நாராயணசாமி என்பவர் அதே இடத்தில் பல ஏக்கர்களை ஆக்கிரமித்து வணிகவளாகம் வீடுகள் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அவற்றையெல்லாம் தவிர்த்து அரசு இயந்திரம் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக கிழாய் கிராம மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா