Wednesday, March 19, 2025
Home > அரசியல் > இனி எல்லாம் இப்படித்தான்..! தனி ஒரு ஆளாக நின்று திமுகவினரை கதறவிட்ட பிஜேபி கவுன்சிலர்..!

இனி எல்லாம் இப்படித்தான்..! தனி ஒரு ஆளாக நின்று திமுகவினரை கதறவிட்ட பிஜேபி கவுன்சிலர்..!

8-12-21/11.10am

கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் திமுக தலைவர் ஸ்டாலினால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் அரசின் நெறிமுறைகளை மீறி கட்சி அலுவலகம்போல ராகுல் காந்தி படத்தை மாட்டியிருக்கின்றனர் திமுக விசுவாச அதிகாரிகள். அரசு நெறிமுறைகளின் படி பிரதமர் புகைப்படம் மற்றும் மாநில முதல்வரின் புகைப்படம் மட்டுமே இடம்பெற வேண்டும்.

இந்த தகவலை அறிந்த விருத்தசலம் ஒன்றிய கவுன்சிலரான E.R. செந்தில்குமார் தனி ஆளாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு பிரதமர் புகைப்படம் இல்லாததை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். பின்னர் அதிகாரிகள் மற்றும் திமுகவினரிடம் கொஞ்சம் கட்டளை தொனியுடன் பேசி அங்கிருந்த ராகுல் மற்றும் இந்திரா படங்களை அகற்ற வைத்திருக்கிறார். அதன்பின்னரே பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.

`

இதுகுறித்து செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பத்திரப்பதிவு துறை புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த அலுவலகத்திற்கும், தமிழக அரசிற்கும் இந்திய அரசிற்கும் சம்பந்தமில்லாத ராகுல் காந்தி உருவப்படம் மாட்டப்பட்டது. ஆனால் அங்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் படம் இடம்பெறவில்லை. இந்த செய்தியை அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவரும் விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலருமான திரு. E.R. செந்தில்குமார் ஆகிய நான் அங்கு விரைந்து சென்று மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாத ராகுல் காந்தி படம் இடம்பெற்ற நிலையில் இந்த இந்திய தேசத்தின் ஒரு பகுதியான இந்த அலுவலகத்தில் பாரதப்பிரதமர் படமில்லாதது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

```
```

எனவே, உடனடியாக ராகுல் காந்தி படத்தை அகற்ற கோரியும் பாரத பிரதமரின் படத்தை வைக்கக் கோரியும் தனி ஒருவராக அங்குள்ள அனைவரிடமும் கடுமையாக போராடி ராகுல் காந்தி படத்தை அகற்றி விட்டு பாரத தேசத்தின்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் படத்தை இடம்பெற செய்து அலுவலகத்திற்கு பெருமை சேர்த்தேன்” என குறிப்பிட்டுள்ளார். தனி ஒரு ஆளாக நின்று திராவிட ஸ்டாக்குகளை கதற விட்டுவிட்டார் என பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா