21-12-21/15.55pm
டெல்லி : கடந்த வருடம் நடந்த மன்னிக்கவும் நடக்க இருந்த குளிர்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் எந்த ஒரு மசோதாவும் தாக்கல் செய்யவிடாமல் அமளியில் ஈடுபட்டு கூட்டத்தொடர் நடைபெறாமலேயே பாராளுமன்றம் கலைந்தது.
அதே சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. கடந்த வருடம் குளிர்கால கூட்டத்தொடரின் முன்பாக ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பிஜேபியினர் குழு அவர்களது ஆதரவை கோரியது. ம்சோதா தாக்கல் செய்ய அவர்களின் ஒத்துழைப்பை வேண்டியது. ஆனால் அதை உதாசீனப்படுத்திய எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.
இந்த வருடம் அதை உணர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு யாரையும் அணுகவில்லை. அமளியில் ஈடுபட்டு சபை நாகரிகத்தை மீறியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதையடுத்து கூட்டத்தொடர் சீராக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் அடுக்கடுக்காக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முக்கியமான ஒன்றை சட்டத்துறை அமைச்சர் கிர்ரென் ரிஜ்ஜு தாக்கல் செய்தார். அந்த மசோதா வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் அட்டையையும் ஒன்றிணைப்பது குறித்ததாகும். இதற்க்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காத எம்பிக்கள் தொடர் முடிந்து வெளியே வந்ததும் எதிர்ப்புக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதிலும் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் ” ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் போல கிர்ரென் ரிஜ்ஜு வந்தார் வேகமாக வாசித்தார். உட்கார்ந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் பேச அனுமதி கூட கொடுக்கவில்லை” என குறிப்பிட்டார். ஆனால் இதே காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் 2019ல் நடந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் அட்டையையும் ஒருங்கிணைக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல இந்த திட்டத்தை முதலில் முன்மொழிந்தது பி.சிதம்பரம் அவர்களே. இதை உணர்ந்த மோடி சரியான திசையில் காய் நகர்த்தி காங்கிரசை பதம் பார்த்துவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் ஆதார் கார்டை அமுல் படுத்த நினைத்து பின்வாங்கியது காங்கிரஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா