Thursday, March 28, 2024
Home > செய்திகள் > சிவன் கோவிலை இடித்து தாஜ்மகால் கட்டப்பட்டதா..? வெளியான ஆதாரங்கள்..! கிளம்பிய சர்ச்சை..!

சிவன் கோவிலை இடித்து தாஜ்மகால் கட்டப்பட்டதா..? வெளியான ஆதாரங்கள்..! கிளம்பிய சர்ச்சை..!

23-11-21/12.41pm

இந்தியா : இந்திய கண்டத்தில் முகலாயப்படையெடுப்பின் போது இந்துக்களின் கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இடிக்க முடியாத பல புராதன கோவில்கள் மசூதியாக வடிவமைக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சிவன் கோவிலை இடித்தே தாஜ்மஹால் கட்டப்பட்டது எனும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்தியாவில் உள்ள கோவில்கள் மசூதியாக்கப்பட்டது என கூறியிருப்பதில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது என்பது தொல்லியல் ஆரய்ச்சிகளின் முடிவை பொறுத்தது. ஆனால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சில முக்கியமான கோவில்கள் மசூதியாக்கப்பட்டதை ஆதாரத்துடன் கூறுகின்றனர். இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று ஆராய்ச்சியாளரான புனேவை சேர்ந்த PN.OAK சிவன் கோவிலை மறைத்து அதன் மீது தாஜ்மஹால் கட்டப்பட்டிருப்பதாக நூற்றுக்கும் மேலான ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.

அந்த கட்டுரையின் சாராம்சத்தையும் ஆதாரங்களையும் கீழ்க்காணும் லிங்கில் காணலாம். புகைப்படங்களுடன் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புகலேற்ற கோவில்கள் மசூதியாக வடிவமைக்கட்டது என சில பெயர்களையும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அயோத்தி ராமர் கோவிலே பாபர் மசூதியாக மாறியது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

`

அதே போல மதுராவில் உள்ள கோவில் மற்றும் அஹமதாபாத் வாரணாசி மால்டா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கோவில்கள் மசூதியாக மாற்றப்பட்ட அவலமும் நடந்தேறியுள்ளது. தென்தமிழகத்தில் களக்காடு அருகே மிகவும் பழமையான சிவன் கோவில் முகலாயர்களால் இடிக்க முயற்சிக்கப்பட்டு முடியாமல் கோவிலை சிதைத்துவிட்டுப்போன அடையாளம் இன்னும் இருக்கிறது.

இந்த தாஜ்மகால் விவகாரத்தில் தொல்லியல்துறையை வரலாற்று ஆய்வாளர்கள் அணுகியிருப்பதாக சொல்லப்படுகிறது.எதுவாக இருந்தாலும் இருதரப்பினரும் சுமூகமாக இந்த சர்ச்சைக்குரிய விஷயத்தை கையாளவேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்தாக இருக்கிறது.

```
```

https://t.co/Rk4zqPicLl?amp=1

……ஆய்ஷா ரகுமான்