Saturday, August 22, 2026
Home > அரசியல் > காண்ட்ராக்டர் மர்ம மரணம்..! சிக்கும் பிஜேபி அமைச்சர்..?

காண்ட்ராக்டர் மர்ம மரணம்..! சிக்கும் பிஜேபி அமைச்சர்..?

13-4-22/13.51PM

கர்நாடகா : ஹிந்து அமைப்பான ஹிந்துவாஹினி அமைப்பின் தேசிய செயலாளரும் ஒப்பந்தக்காரருமான சந்தோஷ் பாட்டில் நேற்று தனியார் விடுதி ஒன்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

இகடந்த 11ம் தேதி துாக்கிட்டு பாட்டீல் எழுதியுள்ள கடிதத்தில் “முடிக்கப்பட்ட பணிகளுக்கு கமிஷன் தருமாறு அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது கூட்டாளிகள் என்னை வற்புறுத்துகின்றனர்.

முக்கிய செய்தி: அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 இனி சமத்துவநாளாக கொண்டாடப்படும்- தமிழக முதலமைச்சர்
ஆனால் இனி அம்பேத்கர் பிறந்ததினம் அரசுவிடுமுறை என மத்திய பிஜேபி அரசு கடந்தவாரம் கூறியிருந்தது.

மேலும் பெங்களூர் பெல்காவி பகுதியில் உள்ள ஹிடால்கோ கிராமத்தில் சாலை அமைக்க மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா நான்குகோடி கமிஷன் கேட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

இன்று பெங்களூர் திரும்பிய முதலமைச்சர் பசவ்ராஜ்பொம்மை அமைச்சரை சந்தித்து ராஜினாமா செய்ய கோருவார் என தெரிகிறது.

இன்று காலை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ” என்னை ராஜினாமா செய்ய கோரினால் நான் செய்ய தயாராய் இருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை சட்டத்தின் மூலம் நிரூபிப்பேன்” என கூறியுள்ளார்.

…..உங்கள் பீமா

follow us on google news https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen