31-12-21/13.00pm
மொடக்குறிச்சி : தீவிர திமுக அபிமானியாக இருந்து சமீபத்தில் தன்னை பிஜேபியில் இணைத்துக் கொண்ட அப்பாவி ஒருவரை திமுக கிளை செயலாளர் அடித்துக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொடக்குறிச்சி தாலுகா தெற்கு ஒன்றியம் வடுகபட்டி நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் தீவிர திமுக அபிமானி. சமீபகாலமாக திமுகவின் கொள்கைகள் பிடிக்காத காரணத்தால் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் மொடக்குறிச்சி சரஸ்வதி அவர்களின் தலைமையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இணைந்த கையோடு சரஸ்வதி அவர்களுடன் தனது பகுதியில் உள்ள சேதமடைந்த சாலைகளை பார்வையிட அழைத்து சென்றுள்ளார்.

சேதங்களை பாரவையிட்ட எம்.எல்.ஏ.சரஸ்வதி அவர்கள் குறைகளை சரிசெய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வடிவேல் தனியாக வருவதை கவனித்த திமுக முன்னாள் கவுன்சிலர் மற்றும் இந்நாள் கிளைசெயலாளரான தம்பி என்கிற ஈஸ்வர மூர்த்தி வடிவேலை மடக்கி கட்டையாலும் கற்களாலும் தாக்கி கொன்று அங்கு இருந்த விநாயகர் கோவிலில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதை கண்டு அலறியுள்ளனர். மேலும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலத்தை மீட்க காவல்துறை விரைந்துள்ளது. மேலும் பிஜேபி மாவட்ட செயலாளர் மற்றும் பிஜேபி தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இது பிஜேபியின் மீதுள்ள காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு என பிஜேபியினர் தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா
