Thursday, April 18, 2024
Home > செய்திகள் > கோவில்களை விடுவிக்கும் அரசு..! கதறும் எதிர்க்கட்சிகள்..!

கோவில்களை விடுவிக்கும் அரசு..! கதறும் எதிர்க்கட்சிகள்..!

31-12-21/11.51AM

கர்நாடகா : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கோவில்கள் அரசுபொருப்பிலிருந்து விரைவில் விடுவிக்க மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

நேற்று கர்நாடகாவில் நடந்த பிஜேபி செயற்குழு கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ” பிஜேபி அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. மாற்று மத அமைப்பின் வழிபாட்டுத்தலங்கள் சுதந்திரமாக தனியார் கட்டுப்பாட்டில் இருப்பது போல விரைவில் இந்துக்களின் கோவில்களும் அரசிடமிருந்து வெளியேறும்,

`

வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார். முதல்வரின் இந்த பேச்சுக்கு முதல் ஆளாய் எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளார் கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார். இவர் மீது மதமாற்ற சக்திக்கு துணை போகிறார் என்ற விமர்சனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

```
```

சிவகுமார் ஒரு கமிஷன் ஏஜென்ட் என பொதுக்கூட்டமேடையிலேயே காங்கிரஸ் எம்பி கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் சிவகுமார் ” அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. கோவில்களை சங் பரிவார் அமைப்புக்களிடம் ஒப்படைக்க ஒரு இந்துவாக நான் எப்போதும் அனுமதிக்கமாட்டேன்” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

…..உங்கள் பீமா