Tuesday, June 25, 2024
Home > செய்திகள் > ஆபாச நடனமா..? இணையத்தில் வைரலாகும் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சி..!

ஆபாச நடனமா..? இணையத்தில் வைரலாகும் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சி..!

31-12-21/14.42pm

திருச்சி : நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திருச்சி சென்றார். அங்கு ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் சத்திரம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார். அவர் வருகையையொட்டி திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த குத்தாட்ட நிகழ்ச்சி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று திருச்சி சென்று 604 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு 327 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அங்கு முதல்வருக்கு நினைவுபரிசுகள் திமுகவினரால் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி திமுக தொண்டர்கள் முதல்வரை வரவேற்க நடன நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

`

இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் நடனமாடினர். அதில் பல ஆபாச பொருள் தரும் பாடல்களை போட்டு ஆபாச நடனம் ஆடியதாக புகார் எழுந்துள்ளது. பொதுவெளியில் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் பார்க்கும் வகையில் ரோட்டருகே போடப்பட்டிருந்த மேடையில் ராத்திரி நேரத்து பூஜையில் என தொடங்கும் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியது பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

```
```

ஒரு பாரம்பரியமிக்க அரசியல் கட்சியினரின் இந்த நடவடிக்கைகள் அரசியல் கட்சியினரிடையே பெருத்த அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது. மேலும் அதிமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

……உங்கள் பீமா