Saturday, July 27, 2024
Home > அரசியல் > மத்திய அமைச்சர் முருகன் பெயரில் கள்ள ஒட்டு..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கொந்தளிப்பு..!

மத்திய அமைச்சர் முருகன் பெயரில் கள்ள ஒட்டு..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கொந்தளிப்பு..!

19-2-22/16.00pm

updated : 17.39pm

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல நகரங்களில் வாக்குச்சாவடி அருகே நின்று திமுகவினர் பணப்பட்டுவாடா செய்துவருவதாக பிஜேபி தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் முருகன் அவர்களின் ஒட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிஜேபி தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் “அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அறிவாலயம் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம். ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது.

`

மாண்புமிகு திரு முருகன் மத்திய அமைச்சரின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா” என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களின் குழுவில் இருந்து பேசுகிறோம் என கூறி வேட்பாளர்களிடம் பூத் ஏஜென்ட் விவரங்களை மர்ம நபர்கள் சேகரித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

```
```

……உங்கள் பீமா

சென்னை அண்ணாநகரில் கள்ள ஓட்டு போடப்படவில்லை. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எப்போது வந்தாலும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் பேராதரவுடன் madrastelegram இப்போது கூகுள் நியூசிலும்..https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen