Tuesday, June 17, 2025
Home > அரசியல் > பிஜேபி பூத் ஏஜென்ட் கைது..! முழுபின்னணி..! வெளியான வீடியோ..!

பிஜேபி பூத் ஏஜென்ட் கைது..! முழுபின்னணி..! வெளியான வீடியோ..!

20-2-22/10.50am

மதுரை : தமிழக நகர்ப்புற தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியினர் பல தில்லுமுல்லுகளை செய்திருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே மதுரையில் பிஜேபி தேர்தல் முகவரை வாக்குசாவடியிலிருந்து திமுகவினர் தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் 8 ஆவது வார்டில் பிஜேபி தேர்தல் முகவராக இருப்பவர் கிரிநந்தன். அந்த வார்டில் பிஜேபி தரப்பில் பெண் வேட்பாளரும் திமுக தரப்பில் முஹம்மது யாஸிப் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுக்கான வாக்குச்சாவடி அல் அமீன் பள்ளியில் நடைபெற்றது. நேற்று பிஜேபி வேட்பாளரை தடுத்த திமுக வேட்பாளர் முஹம்மது யாஸிப் முகவர் கிரிநந்தனையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

மேலும் சந்தேகத்திற்குரிய வகையில் 30 பேருக்கும் மேலானோர் புர்ஹா அணிந்து கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்ததாக தெரிகிறது. அவர்களின் முகத்தை பார்க்க வேண்டும் கள்ள ஓட்டாக மாறிவிடக்கூடாது என முகவர் கிரிநந்தன் கேட்க வேட்பாளர் முஹம்மது மற்றும் திமுக தொண்டர்கள் கிரிநந்தனை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதாக வீடியோ ஒன்றை முகவர் வெளியிட்டுள்ளார்.

`

இதனிடையே பூத்தை கைப்பற்றும் முயற்சியில் திமுகவினர் ஈடுப்பட்டதாக தெரிகிறது. மேலும் கிரிநந்தனை காவல்துறை உதவியோடு அப்புறப்படுத்திய திமுகவினர் அவர் மீது புகார் கொடுத்தனர்.

```
```

அதையடுத்து போலீசார் கிரிநந்தனை கைது செய்து மதத்தின் உணர்வை புண்படுத்துதல் பணிசெய்ய விடாமல் தடுத்தல் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

…..உங்கள் பீமா