30-3-22/9.04AM
சென்னை : நேற்று முழுவதும் இணையத்தில் முடிந்தால் கைதுசெய் என இந்திய அளவில் ட்ரெண்டானது. திமுக தலைவர்கள் தொடர்ந்து தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மீது அபாண்டமான குற்றசாட்டுகளை கூறிவருகின்றனர். இதற்கு பதிலடியாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை முடிந்தால் கைதுசெய்யுங்கள் ஆறுமணிநேரம் கமலாலயத்தில் காத்திருக்கிறேன் என கூறினார்.
முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக தமிழக பிஜேபி விமர்சித்து வருகிறது. மேலும் BGR எனும் நிறுவனத்துடன் திமுக அரசு போட்டிருக்கும் ஒப்பந்தம் குறித்தும் குற்றசாட்டு எழுப்பிவருகிறது. இந்நிலையில் ஆர்.எஸ். பாரதி தமிழக பிஜேபி தலைவரை கைதுசெய்யப்போவதாகவும் அவர்மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாகவும் மிரட்டியிருந்தார்.
இதற்க்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ஆர்.எஸ். பாரதி முதல்வரை ரகசிய பாதுகாப்பு பிரமாணத்தை மீறிய குற்றத்திற்காக சிறைக்கு அழைத்துச்செல்ல விரும்புகிறார் என கூறினார். மேலும் தொல்.திருமாவளவனை அரசியலுக்கே தகுதியில்லாதவர் என ஒரு பிடி பிடித்தார். அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பை தொடர்ந்து இணையத்தில் முடிந்தால் கைதுசெய் என ட்ரெண்டாகி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.
…..உங்கள் பீமா
