Saturday, July 27, 2024
Home > அரசியல் > போகாத ஊருக்கு வழி தேடுகிறார் முதல்வர்..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை காட்டம்..!

போகாத ஊருக்கு வழி தேடுகிறார் முதல்வர்..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை காட்டம்..!

5-2-22/11.20am

சென்னை : நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் திமுகவால் இன்று நடத்தப்படுகிறது. சற்று நேரத்தில் தொடங்கப்படும் இந்த கூட்டத்தில் திமுக ஆதரவு கட்சிகள் கலந்துகொள்ள இருக்கின்றன. அதிமுக பிஜேபி இரு கட்சிகளும் அந்த கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவின் நாடகம் குறித்த உண்மையை அம்பலப்படுத்தினார். அவர் கூறியதாவது ” பிப்ரவரி 2017 ல் நீட் தேர்வு விலக்குகுறித்து அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழக ஆளுநர் இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு அதே மாதம் அனுப்பிவைத்தார்.

மத்திய அரசு மார்ச் மாதம் இதுகுறித்த விளக்கத்தை தமிழக அரசிடம் கேட்டிருந்தது. ஏப்ரல் 2017ல் தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. மே மாதம் மீண்டும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் திமுக நாடகமாடுகிறது.

`

தமிழக ஆளுநர் ரவி அவர்கள் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது என்ன என்பதை தமிழக அரசு மறைப்பது ஏன். ஆளுநர் அறிக்கையை வெள்ளையறிக்கையாக திமுக அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வு முதலாளித்துவத்திற்கு எதிரானது. பலமுறை ஆட்சியில் இருந்தபோதும் மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவர முயற்சி செய்யாத திமுக தற்போது நாடகமாடுகிறது.

அவர்கள் செய்த சாதனை தனியார் மருத்துவக்கல்லூரிகளை கொண்டுவந்தது தான். போகாத ஊருக்கு வழி தேடுகிறார் முதல்வர்.யாரை ஏமாற்ற பார்க்கிறார் முதல்வர். மிகப்பெரிய பிராடு இந்த வருடம் தமிழக அரசு குறிப்பாக மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட பட்டியல் தான். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய அறிக்கையில் எத்தனை பேர் அரசுப்பள்ளியிலிருந்து தேர்வாகியிருக்கிறார்கள்.

```
```

எத்தனை பேர் அரசு உதவிபெறும் பள்ளியிலிருந்து தேர்வாகியிருக்கிறார்கள் என சொல்ல மறுக்கிறார்கள். இது மிகப்பெரிய மோசடி வேலை.என தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வேண்டும் என மசோதா தாக்கல் செய்த திமுக தற்போது நாடகமாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா