Thursday, June 20, 2024
Home > அரசியல் > பூணுலை இழுத்த வன்னியரசு..! பொங்கியெழுந்த அமெரிக்கை நாராயணன்..!

பூணுலை இழுத்த வன்னியரசு..! பொங்கியெழுந்த அமெரிக்கை நாராயணன்..!

19-2-22/13.23pm

சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதற்கென தனி கொள்கைகள் கோட்பாடுகள் உண்டு. ஆனால் விசிகவுக்கு மட்டும் சனாதன வேரறுப்பு பூணுல் அறுப்பு என்கிற தாரகமந்திரத்தோடு கொள்கையென எதுவும் இல்லாமல் அரசியல்கட்சியாய் நிற்கிறது. விசிக தலைவரும் சரி அவரது அடுத்த கட்ட தலைவர்களும் சரி பூணுல் மீதான தங்கள் காழ்ப்புணர்ச்சியை ஒவ்வொரு கூட்டத்திலும் வெளிப்படுத்துவர்.

இதனிடையே விசிகவை சேர்ந்த வன்னியரசு ” விடுதலை சிறுத்தைகள் தமிழகத்தை ஆளும் காலம் வெகுதொலைவில் இல்லை. எழுச்சித்தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.(?) அப்போது தமிழ்நாட்டில் பூணூல் அணிய தடைவிதிக்கப்படும்” என கூறியுள்ளார். இதை பார்த்து கொந்தளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் பதிலடி கொடுத்துள்ளார்.

“மத நல்லிணக்க கூட்டணியில் உள்ள திருமாவளவன் தன் கட்சியின் ஊடகவியல் வன்னியரசு சொல்வதுதான் விடுதலை சிறுத்தையின் அதிகாரபூர்வ நிலையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். வன்னியரசு சொல்லியிருந்தால் வன்மையாக கண்டிக்கிறேன். வன்னியரசு கூட்டணியிலிருக்க தகுதியற்றவர். அண்ணாமலைக்கு பதில் சொல்ல ஒரு சாதியை தாக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு சாதியை தரக் குறைவாக தாக்குபவர் சாதியவாதியே அண்ணாமலையின் கட்சியின் க தாக்கட்டும்.

`

பூணூல் என்பது ஹிந்து மதத்தில் உள்ள பல வகுப்புகள் பல காலங்களாக அணிந்து வருகிறார்கள். அது பிராமணர்களின் குறியீடு என்று உங்களால் மூளை பல காலங்களாக வன்னிஅரசு போன்றவர்களால் சலவை செய்யப்பட்டு உள்ளது. பூணூல் போடுவதால் யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை. அது என் நம்பிக்கை” என கடுமையாக பொங்கி பதிலடி கொடுத்துள்ளார்.

```
```

ஏற்கனவே சமீபகாலமாக முதல்வர் திருமாவளவன் முதல்வர் திருமாவளவன் என கூறி திமுக தலைமையிடம் திருமாவளவனை விசிகவினர் கோர்த்துவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா