Monday, December 2, 2024
Home > செய்திகள் > மாநிலம் தாண்டிய செல்வாக்கு..! கம்யூனிஸ்டுகளை கதறவிட்ட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

மாநிலம் தாண்டிய செல்வாக்கு..! கம்யூனிஸ்டுகளை கதறவிட்ட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

2-12-21/12.45PM

கேரளா : தமிழகம் மட்டுமல்ல மாநிலம் தாண்டியும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு செல்வாக்கு உயர்ந்திருப்பதை கேரளாவில் நடந்த கூட்டம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

கண்ணூரில் பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத்தலைவராக இருந்தவர் ஜெயகிருஷ்ணன்
ஆசிரியரான இவர் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அமைதியான குணம் கொண்டவர். அழகாக பேசக் கூடியவர். அவரது பேச்சை கேட்கும் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாஜகவை ஆதரிக்க தொடங்கினர்.

இதனால் கோபமுற்ற கம்யூனிஸ்ட்டுகள் அவரை கொலை செய்ய இரண்டு முறை முயன்று தோற்றனர். காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கண்ணூர் கூத்தப்பரம்பு அருகில் உள்ள மோர்க்கேரி கிழக்கு UP பள்ளியில் 1999 டிசம்பர் 1 ஆம் தேதி அன்று காலை 10.35 மணி ஆறாம் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன்.

`

அவருக்கு பாதுகாப்பு அளித்த காவலர் வகுப்பின் வெளியே அமர்ந்திருந்தார். 7 பேர் கொண்ட கம்யூனிச பயங்கரவாதிகள் கும்பல் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற கோஷத்துடன் பள்ளியில் நுழைந்து ஆறாம் வகுப்பு அறைக்குள் சென்று பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் ஜெயகிருஷ்ணனை அத்தனை மாணவர்கள் முன்னிலையில் வெட்டிக் கொன்றனர்.

திரும்பும் போதும் ரத்தம் சொட்டும் வாள்களுடன் அதே கோஷத்துடன் சென்றனர்..
மூன்று வருடங்கள் கழித்து இந்த கொலை வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இருவரை விடுவித்து ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தது. ஐந்து வருடம் கழித்து உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்தது மட்டுமல்ல நான்கு பேரை விடுதலையும் செய்தது ஒருவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. அவரும் நன்னடத்தை என்ற பெயரில் இன்று வெளியே வந்து விட்டார்.

```
```

ஆசிரியர் ஜெயகிருஷ்ணனின் நினைவஞ்சலிக்கு கேரளா சென்ற தமிழக தலைவர் அண்ணாமலை கம்யூனிஸ்டுகளை வெளுத்து வாங்கிவிட்டார். மேலும் “SDPI குண்டர்கள் கொலை செய்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். அரசுக்கு அவர்களை பிடிக்க வக்கில்லை. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற கூடிய முதலமைச்சர் என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள்” என முதல்வர் பினராயி விஜயனை ஒரு பிடி பிடித்துவிட்டார்.

மேலும் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் நினைவஞ்சலிக்கு வந்த பொதுமக்கள் அண்ணாமலை அவர்களின் பேச்சை வெகுவாக ரசித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமல்ல தென்னிந்திய முழுக்க மெல்ல மெல்ல அண்ணாமலை அவர்களின் செல்வாக்கு அதிகரித்துவருவது கவனிக்கத்தக்கது.

….உங்கள் பீமா