Friday, March 29, 2024
Home > அரசியல் > கோவா வெற்றி நிலவரம்..! சுயேச்சையாக போட்டியிட்ட மனோகர் பாரிக்கர் வாரிசு..!?

கோவா வெற்றி நிலவரம்..! சுயேச்சையாக போட்டியிட்ட மனோகர் பாரிக்கர் வாரிசு..!?

10-3-22/16.32PM

இந்தியா : இன்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு சாதகமாக வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் 2012ல் ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மீயின் அபார வளர்ச்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது நிலவரப்படி கோவாவில் பிஜேபி 14 இடங்களில் வென்றுள்ளது. ஆறு இடங்களில் முன்னிலையில் இருக்க 11 இடங்களில் தோல்வியுற்றுள்ளது. பனாஜியில் தனக்கு சீட் கொடுக்காததால் பிஜேபியில் இருந்து விலகிய மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் அவர்களின் மகன் உத்பால் பாரிக்கர் பனாஜியில் சுயேச்சையாக நின்றார். அவரை எதிர்த்து பிஜேபி தரப்பில் அதனாசியோ மான்சராட்டே நிறுத்தப்பட்டார்.

59 வயதான அதனாசியோ மான்சராட்டே 6787 வாக்குகள் பெற்று 716 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். உத்பால் பாரிக்கர் 6071 வாக்குகள் பெற்று கடும்போட்டியை கொடுத்துள்ளார். கோவிந்த் செபு ப்ரிரால் தொகுதியில் 11019 வாக்குகள் பெற்று 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். உள்ளதால் நவேலின் தொகுதியில் 5168 வாக்குகள் பெற்று 430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.

`

நிலேஷ் காப்ரால் குரஸோரெம் தொகுதியில் 9973 வாக்குகள் பெற்று 672 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். சங்கியேம் தொகுதியில் சுபாஷ் 8724 வாக்குகளுடன் 1429 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றிபெற்றுள்ளார். தபோலிம் பகுதியில் மோவின் ஹெலியோடோரோ 1570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

தலைக்கோவா பகுதியில் ஜெனிபர் 2041 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்வெற்றி பெற்றுள்ளார். திவிம் தொகுதியில் நீல்காந் 2051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார். சிரோடா தொகுதியில் சுபாஷ் 2174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார். மாயம் தொகுதியில் ப்ரீமேந்திரா விஷ்ணு 3136 வாக்குகள் வித்தியாசத்தில் பெர்னெம் தொகுதியில் பிரவீன் பிரபாகர் 3418 வாக்குகள் வித்தியாசத்திலும், ரோஹன் காண்டே பார்வோரிம் தொகுதியில் 7950 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளார்.

```
```

7514 வாக்குகள் பெற்று 77 வித்தியாசத்தில் போண்டா தொகுதியில் ரவிநாயக் வெற்றிபெற்றுள்ளார். சங்குலிம் தொகுதியில் டாக்டர் பிரமோத் சாவந்த் 12250 வாக்குகள் பெற்று 666 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

வல்போய் தொகுதியில் விஸ்வஜித் 8055 வாக்குகள் வித்தியாசத்திலும்,பொறியேம் தொகுதியில் தேவியா விஸ்வஜித் 13943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த 18 வெற்றிகள் தவிர மாபுஸா மற்றும் வாஸ்கொடகாமா ஆகிய இரு தொகுதிகளில் பிஜேபி முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் அல்டோனா மார்முகாவ், கம்பர்ஜுவா, கியூபெம்,கலங்குட், மார்காவ் ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

…..உங்கள் பீமா