Tuesday, March 19, 2024
Home > அரசியல் > அந்தமானில் அண்ணாமலை..! அங்கேயும் திமுக..!

அந்தமானில் அண்ணாமலை..! அங்கேயும் திமுக..!

26-2-22/15.50pm

அந்தமான் : அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மார்ச் மாதம் நகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 12 அன்று நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுக தெலுங்கு தேசம் என கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

தமிழகத்தைப்போல பிஜேபி மொத்தமுள்ள 24 வார்டுகளிலும் தனித்து களம்காண்கிறது. மார்ச் 6 தொடங்க உள்ள தேர்தலின் முடிவுகள் மார்ச் 8 அறிவிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு வாக்குப்பதிவு நேரம் இரண்டுமணிநேரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஜேபி மாநில தலைவர் அஜோய் பைரகி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

`

” தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டுள்ள 24 வேட்பாளர்கள் நிச்சயம் .வெற்றிபெறுவார்கள். மாநிலத்தின் வளர்ச்சியை மக்கள் நன்கு அறிவார்கள்” என குறிப்பிட்டார். மேலும் திமுக போர்ட் பிளேர் நகராட்சி வார்டுகள் 1.6.9,15 மற்றும் 21ஆவது வார்டுகளில் போட்டியிடுகிறது. இதை திமுக மாநில பொறுப்பாளர் குழந்தை உறுதிப்படுத்தியுள்ளார்,

```
```

இந்த தேர்தலில் வேட்பாளர்களுக்காக தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தமிழகத்தை போலவே செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும் பிரச்சார வாகனங்களில் சிங்கம் என்கிற அடைமொழியுடன் அண்ணாமலை அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த தேர்தலில் 16 வார்டுகளில் பிஜேபிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

….உங்கள் பீமா