Tuesday, April 23, 2024
Home > பங்குச் சந்தை > பேடிஎம் பங்கு..! பதறும் வாடிக்கையாளர்கள்..!

பேடிஎம் பங்கு..! பதறும் வாடிக்கையாளர்கள்..!

23-1-22/18..pm

Paytm பங்குகள் தொடர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்..?

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பே.டி.எம் இந்திய பங்குச் சந்தையில் கடந்த நவம்பர் மாதம் தனது வர்த்தகத்தை தொடங்கியது.

துரதிர்ஷ்டவசமாக இந்த பங்கு வர்த்தகத்தின் முதல் நாளில் இருந்து தொடர் விழ்ச்சியை சந்தித்து பங்கு முதலீட்டாளர்களுக்கு பல மில்லியன் நஷ்டத்தை தந்துள்ளது.

`

அது மட்டும் இல்லாமல் இது மேலும் விழ்ச்சியை சந்திக்கும் என்று பல முன்னணி நிறுவனங்களில் கூறியுள்ளார்கள்.

நவம்பர் மாதத்தில் இதன் சந்தை மதிப்பிடு சுமார் 1.4 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 62,166 கோடியாக இதன் மதிப்பிடு குறைந்துள்ளது.

```
```

இந்த கம்பெனியின் சீ.இ.ஒ திரு.விஜய் சேகர் இது புதிய வகையான பிசினஸ் மாடல் என்பதாலும் உலகலாவிய அளவில் டெக்னாலஜி பங்குகளின் சரிவு மற்றும் குறைந்த பத்திர மதிப்பிட்டின் காரணமாக பங்கு விழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

எதுவாயினும் வாடிக்கையாளர்கள் இந்த பங்கினை குறைந்த பட்சம் ஆறு மாத காலத்துக்கு தவிர்ப்பது நல்லது. தற்போதைய நிலையில் இருந்து சுமார் 25 சதவீதம் குறைந்த பின்னர் இந்த பங்கினை வாங்கலாம். மேலும் நீண்ட கால இலக்கு வைத்து இந்த பங்குகளை வாங்கும் பட்சத்தில் லாபம் அடைய வாய்ப்புள்ளது.

செளந்தரராஜன் சேதுராமன், நங்கநல்லூர்