Friday, April 19, 2024
Home > செய்திகள் > முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு..! கலங்கும் எம்.எல்.ஏக்கள்

முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு..! கலங்கும் எம்.எல்.ஏக்கள்

10-4-22/16.00PM

உத்திரபிரதேசம் : மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் யோகி தான் ஒரு புல்டோசர் பாபா என மீண்டும் நிரூபித்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் யோகி தலைமையில் நடந்த அதிகாரிகளுடனான சந்திப்பில் ” சட்டவிரோதமாக சம்பாரித்தவர்கள் ஏழை கல் மற்றும் வணிகர்களின் இடத்தை ஆக்கிரமித்தவர்களிடம் பாகுபாடு காட்டாதீர்கள். புல்டோசர் தனது வேலையை செய்யட்டும். அதேபோல குற்றவாளிகளிடமும் மாபியாக்களிடமும் தயவுதாட்சன்யம் பார்க்காதீர்கள்.

ஆனால் ஏழை மக்களின் குடிசைகள் அவர்களின் கடைகளை விட்டுவிடுங்கள். உங்கள் புல்டோசர் சட்டத்துக்கு புறம்பானவர்களிடம் மட்டுமே செயல்படவேண்டும்” என கூறியுள்ளார்.

`

மேலும் சமாஜ்வாடி எம்.எல்.ஏ சஷில் இஸ்லாம் அன்சாரியால் பைரேலி டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள பார்சகடே பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பும் நிலையம் பைரேலி நிர்வாகத்தால் இடித்து தகர்க்கப்பட்டது. அதேபோல மற்றொரு சமாஜ்வாடி எம்.எல்.ஏ நஹித் ஹாசனின் குடும்ப உறுப்பினர் சர்வன் ஹசன் கைரனா பகுதியில் ஆக்கிரமித்திருந்த நிலத்தை ஷாம்லி நிர்வாகம் நேற்று கைப்பற்றியது.

மேலும் முன்னாள் எம்பி மற்றும் பிரபல தாதா அதிக் அஹம்மது சாக்கியா பகுதியில் அனுமதியின்றி கட்டிய சுவர் மற்றும் இரண்டு கொட்டாய்களை ப்ரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் இடித்தது. மேலும் அதிக் அஹம்மது கடந்தவாரம் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

அதேபோல கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளனர். இரண்டு கற்பழிப்பு குற்றவாளிகள் அவர்கள் வீட்டருகே நிறுத்தப்பட்ட புல்டோசரை கண்டு உடனடியாக வந்து சரணடைந்திருப்பதாக கூடுதல் தலைமை செயலாளர் நவநீத் சேகல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா

pls follow us on https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen