Monday, December 2, 2024
Home > செய்திகள் > கல்யாணராமனை சந்திக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுமதி மறுப்பு..! கடலூரில் பதட்டம்..!

கல்யாணராமனை சந்திக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுமதி மறுப்பு..! கடலூரில் பதட்டம்..!

13-11-21/ 15.30pm

கடலூர் : தமிழகத்தில் பெய்த தொடர்மழையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக பிஜேபி தலைவர் ஆய்வு மேற்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

இன்று காலை கடலூர் மாவட்ட பிஜேபி செயலாளர் மற்றும் தலைவருடன் அண்ணாமலை கடலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் கடலூர் சிறைக்கு சென்று கல்யாணராமனை சந்திக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. சிறை அதிகாரிகள் சீனத்தொற்றை காரணம் காட்டி அண்ணாமலை அவர்களை சந்திக்க விடாமல் திருப்பியனுப்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

`

சிறை அதிகாரிகளை சந்தித்து கல்யாணராமனை சந்திக்க அனுமதி கேட்டு மறுக்கப்பட்டதும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் அண்ணாமலை சந்திக்க முடியாமல் சென்றதாக கடலூர் பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தலைவர் அண்ணாமலை வடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

```
```

மேலும் அரசியல் கைதியான கல்யாணராமனை சிறையில் எப்படி நடத்துகிறார்கள் என்கிற தகவல் முன்னுக்குப்பின் முரணாகவே வருகிறது. அவர் மீது போடப்பட்ட குண்டர்சட்டத்தை திரும்ப பெற குறுகிய கால அவகாசமே உள்ளது. அதற்க்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள கல்யாணராமனின் நட்புவட்டாரங்களுக்கு சரியான ஆவணங்களை கொடுக்காமல் இழுத்தடிப்பதாக சொல்லப்படுகிறது.

……உங்கள் பீமா