13-11-21/ 14.00pm
சென்னை : மதிமுக தலைவர் வை.கோபால்சாமி அளித்த பேட்டி ஒன்று தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையை சீறிப்பாய வைத்திருக்கிறது.
மதிமுக தலைவர் வை.கோபால்சாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ” முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அண்ணாமலைக்கு அகரம் தெரியாது. இப்போது வந்து பாஜகவில் சேர்ந்திருக்கிற அண்ணாமலை முதலில் ஒரு சாதாரண போலீஸ்காரர்தான். அண்ணாமலை வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது. என்பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை அவர்கள் ” அண்ணாமலைக்கு அகரம் தெரியாது. சிகரம் தெரிந்த வைகோ சீறியிருக்க வேண்டாமா. இலங்கை தமிழர் காவிரி நதிநீர் உள்ளட்ட பல பிரச்சினைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம் நடத்திய திரு.வைகோ முல்லைப்பெரியாறு அணையை திமுக கேரளா அரசுக்கு தாரைவார்த்து கேரளா அமைச்சர் மதகுகளை திறந்தபோது வைகோ வருவார் வருவார் என எண்ணி விவசாயிகள் காத்திருந்தார்கள்.
முல்லைப்பெரியாறு அணைக்கு நான் நான்குமுறை போராட்டம் நடத்திவிட்டேன். அது முடிந்துபோன பிரச்சினை என தனது அறிக்கையில் முழங்கியிருக்கிறார் வைகோ. இப்போது திமுக அரசின் அக்கறையின்மையாலும் ஆளுமைக்குறைவாலும் உருவான புதிய பிரச்சினையை விவசாயிகளின் தவிப்பை அவர் கண்டுகொள்ளவில்லை என பாஜக தேனி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள்.
வெறும் போலிஸ் தானே என என்னை இடித்துரைப்பதாக நினைத்து ஒட்டு மொத்த காவல்துறையையே இழிவுபடுத்தியிருக்கிறார். போராட்டம் முடிந்த நான்கு நாட்களுக்குப்பிறகு மெதுவாக வாய் திறப்பது அவருக்கு பாஜகவின் போராட்டத்தால் விவசாயிகளால் ஏற்பட்ட அழுத்தத்தாலா இல்லை ாலும் திமுக அரசுக்கு ஒத்து ஊதும் அரசியலா.
இந்த உங்கள் அறிக்கையில் கூட முல்லைப்பெரியாறு அணையை தாரைவார்த்த திமுக குறித்து ஒரு கண்டனமும் இல்லையே ஏன். வைகோ அவர்களே வாரிசு அரசியலை எதிர்த்து வாள் வீசி பின்பு அக்கட்சியிலேயே வாரிசுக்கு சாமரம் வீசி தங்கள் கட்சியிலும் வாரிசை ஐக்கியமாகி வாரிசு அரசியலுக்கு வாக்குப்பட்ட உங்களை பற்றி பேச பாஜகவிற்கோ எனக்கோ அருகதை இல்லை என்பது உண்மைதான் வைகோ அவர்களே” என நெத்தியடி கொடுத்துள்ளார் பிஜேபி தலைவர் அண்ணாமலை.
…..உங்கள் பீமா