13-11-21/ 16.04pm
சென்னை : கடலூர் எம்பி மற்றும் விசிக நிறுவனரான திருமாவளவன் சற்று முன்னர் தன்னை பற்றி புகழ்ந்து திரௌபதி படத்தை பற்றி அவதூறாக பேசிய ஒரு டீவீட்டையும் பகிர்ந்திருந்தார். அதற்க்கு மோகன் ஜி சத்ரியன் எதிர்வினையாற்றியுள்ளார்.
அந்த பதிவில் திருமாவளவன் “கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.” என தெரிவித்து அந்த டீவீயின் ஸ்க்ரீன் சாட்டையும் பகிர்ந்திருந்தார்.
அதற்க்கு பதிலடியாக மோகன் ஜி சத்ரியன் “உண்மை சம்பவங்களை அப்படியே திரையில் படமாக்க திராணி வேணும் சகோதரா.. அன்புமணி அண்ணன் கேள்வி கேட்ட பின் புனைவுன்னு சொன்ன படக்குழு ஆரம்ப கட்டத்தில் உண்மை சம்பவம்னு தான் பதிவு செய்தார்கள். மேலும் நீங்கள் குறிப்பிட்ட தலைவரை போல நான் காட்டவில்லை என சொல்லியும் அதையே சொல்வது உன் வன்மம்.
இராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த உண்மையை நீ இப்ப போனாலும் சொல்லுவாங்க.. அப்படியும் நம்பமுடியவில்லை என்றால் நவீனா கொலை வழக்கை #திரெளபதி2 என படமா எடுத்து தர்றேன்.. நாடக காதல்னா என்னான்னு பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.. காலம் அனைவருக்கும் பதில் நிச்சயம் சொல்லும்.” என பதிவிட்டு அடுத்த கதைக்கான முன்னறிவிப்பையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.
…..உங்கள் பீமா