Saturday, July 27, 2024
Home > செய்திகள் > சிக்கும் சித்தார்த்..!? தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி..!

சிக்கும் சித்தார்த்..!? தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி..!

24-2-22/13.23pm

தெலுங்கானா : இடதுசாரி மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து எழுதிவரும் பத்திரிக்கையான தி வயர் பத்திரிக்கை மீது பரத் பயோ டெக் நிறுவனம் 100 கோடி மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளது.

கோவிட் 19 தாக்குதலுக்கு எதிர்ப்பு மருந்தாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவன தயாரிப்பான கோவேக்சின் பற்றி தொடர்ந்து தவறாக எழுதி வந்தது தி வயர் பத்திரிக்கை. இதையடுத்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி விவேக் ரெட்டி தெலுங்கானா நீதிமன்றத்தில் 100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

நிறுவனம் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவில் ” கோவிட் 19 க்கு எதிர்ப்பு மருந்தாக கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் 16-முதல் 19 வயதினரும் செலுத்திக்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அரசால் நடத்தப்படும் மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியோடும் பங்களிப்போடும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்து பயன்பாட்டில் உள்ளது.

`

ஒப்புதல் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் மருந்து தரமற்றதாக இருப்பதாகவும் தி வயர் பத்திரிக்கை மற்றும் அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிருபர்கள் தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்பிவருகின்றனர். இது எங்கள் நிறுவனத்தின் மாண்பை குறைக்கிறது” என அதில் தெரிவித்திருந்ததோடு 100 கோடி இழப்பீடும் கேட்டிருந்தனர்.

```
```
sidharth varadharajan

மனுவை விசாரித்த நீதிபதி அடுத்த 48 மணிநேரத்தில் பரத் பயோ டெக் நிறுவனம் தொடர்பாக எழுதப்பட்ட 14 பதிவுகளை நீக்கவேண்டும் என உத்தரவிட்டதோடு வழக்கை வருகிற மார்ச் 16 க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா