Wednesday, August 12, 2026
Home > அரசியல் > ஒத்த ஒட்டு வாங்கியவர் திமுகவே இல்லை..! சத்தியம் செய்யும் திமுகவினர்..! ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்..!

ஒத்த ஒட்டு வாங்கியவர் திமுகவே இல்லை..! சத்தியம் செய்யும் திமுகவினர்..! ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்..!

24-2-22/12.32pm

சென்னை : தமிழக நகர்ப்புற தேர்தல் ஆளும்கட்சியின் ஆசிர்வாதத்தோடு பணமழையில் மக்களை நனைத்து படுஜோராக நடந்து முடிந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் மொத்தவாக்கு எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவாகி ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

கள்ள ஒட்டு போடமுயன்ற திமுக நிர்வாகியை கையும் களவுமாக பிடித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எட்டு வழக்குகள் போடப்பட்டு சிறையிடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் தர செசன்ஸ் கோர்ட் மறுத்துவிட்ட நிலையில் இன்று இரண்டாவது வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால் கள்ளஓட்டு போட்டதாக கூறப்படும் அந்த திமுக பிரமுகர் மீதான நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் 30 ஆவது வார்டில் மொத்தமுள்ள 5,786 ஓட்டுக்களில் பதிவான ஒட்டு எண்ணிக்கை 7527 என தேர்தல் ஆணையத்திற்க்கே ஷாக் கொடுத்திருக்கிறது திமுக. இதனிடையே திமுக இரணியல் பகுதியில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்துள்ளது. ஆனால் அது திமுக வேட்பாளரே இல்லை என்றும் சுயேச்சை வேட்பாளர் என்றும் திமுகவினர் கூறிவருகின்றனர்.

ஆனால் நெட்டிசன்கள் தேர்தல் ஆணைய சமூக வலைப்பக்கத்திலிருந்து சம்பந்தப்பட்ட வேட்பாளர் திமுகவை சேர்ந்தவர் என்ற ஆவணத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு திமுகவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளனர். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

…..உங்கள் பீமா