Friday, March 29, 2024
Home > செய்திகள் > உக்ரைன் உருட்டு..! பினராயி விஜயனிடம் பாடம் கற்றுக்கொள்வாரா முதல்வர்..?

உக்ரைன் உருட்டு..! பினராயி விஜயனிடம் பாடம் கற்றுக்கொள்வாரா முதல்வர்..?

24-2-22/15.00pm

சென்னை : உக்ரைனில் நிலவும் அசாதாரணமான சூழலில் இந்தியாவை சேர்ந்த 20000 பேருக்கும் மேலானோர் அந்நாட்டில் சிக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேரளமுதல்வர் பினராயி விஜயன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ” உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழலை நாங்கள் கவந்திலன் கொள்கிறோம். கேரளாவிலிருந்து கல்வி கற்கச்சென்ற இந்திய மாணவர்களுடன் கேரளாவை சேர்ந்த 2320 பேர் சிக்கியிருப்பது கவலையளிக்கிறது.

அதில் பல மாணவர்கள் தங்கள் கல்வியை விட முடியாத சூழலில் திரும்பிவர இயலவில்லை. மாண்புமிகு அமைச்சர் இதை கவனத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் என சில தொலைபேசி எண்களையும் வெப்சைட் விலாசத்தையும் அறிவித்துள்ளது.

`

“ரஷ்யா மற்றும் உக்ரைன் வான்வெளியில் மூடப்பட்டு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எந்த ஒரு விமானமும் பறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் தற்போது மூன்று ரஷ்ய விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கேரளா கம்யூனிஸ்ட் முதல்வர் மக்களை காப்பாற்ற என்ன யாரை அணுகவேண்டுமோ அங்கே நாடியிருக்கிறார். ஆனால் தமிழக முதல்வர் போகாத ஊருக்கு வழி தேடுவது போல இதிலும் அரசியல் செய்கிறார்” என பிஜேபியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

```
```

மேலும் தமிழக மக்களை இன்னும் எத்தனை காலம் ஏமாற்றிக்கொண்டிருக்க போகிறது திமுக. மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள் என திமுகவை காட்டமாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.மேலும் உக்ரைன் காஷ்மீர் விவகாரத்தில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா