Friday, February 7, 2025
Home > செய்திகள் > திமுக ஆட்சி அமைத்தது துரதிர்ஷ்டமா..?? முதல்வரை சாடிய பிரபலம்..!

திமுக ஆட்சி அமைத்தது துரதிர்ஷ்டமா..?? முதல்வரை சாடிய பிரபலம்..!

4-11-21/15.00PM

இன்று தமிழர்களின் பண்டிகையான தீபாவளியை ஒட்டி இஸ்லாமிய தேசமே நாடு மக்களுக்கு வாழ்த்து கூறியது. ஆனால் திமுக தரப்பில் முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவிக்காமல் இருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் இந்துமத நம்பிக்கையற்றவர் மற்றும் இந்து கடவுள் மறுப்பாளர் என்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால் முதல்வர் என்பவர் சாதி மதம் மொழி என எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு மக்களின் உணர்வை மதிக்க தெரிந்த மற்றும் மக்களின் பாதுகாவலன் என்பது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கத்தை பலர் விமர்சன செய்து வருகின்றனர். அதில் திமுக ஆதரவாளர் சுமந்த் ராமனும் ஒருவர். அவர் தனது பதிவில் “தீபாவளி பண்டிகை ஹிந்து மதத்தை சார்ந்த பெரும்பாலானோறால் கொண்டாடப்படுகிறது. ஒரு கட்சி தலைவர் வாழ்த்து தெரிவிப்பது அவர் விருப்பம். முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பது அவர் கடமை. பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவிக்கிறார்.

`

ஆனால் பெரும்பாலும் ஹிந்து மக்கள் வாழும் மாநிலத்தின் முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அநேகமாக வாழ்த்து தெரிவிக்காத ஒரே முதல்வர் முக ஸ்டாலின் தான். என் எதிர்பார்ப்பு இந்த முறை எல்லோரையும் அரவணைக்கும் ஒரு ஆட்சி திமுக வழங்கும் என்று. அவ்வாறு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

இந்து மத பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் மாற்று மத நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இது தான் மதச்சார்பின்மையா. இந்த விஷயத்தில் பிஜேபி சரியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அனைத்து மத பண்டிகைகளையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கிறது.

```
```

நான் மிகவும் திமுகவை நம்பியிருந்தேன். துரதிர்ஷ்ட வசமாக அது பொய்யாகிப்போனது. ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்பது பிரச்சினையில்லை. அவர் மக்களின் முதல்வர் எனக்கும் முதல்வர். முதல்வர் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை” என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

……உங்கள் பீமா

#deepavali #dmk #mkstalin