Saturday, October 5, 2024
Home > செய்திகள் > தோண்ட தோண்ட சிசுக்களின் எலும்புகள்..! அதிர வைத்த மகப்பேறு மருத்துவமனை..!

தோண்ட தோண்ட சிசுக்களின் எலும்புகள்..! அதிர வைத்த மகப்பேறு மருத்துவமனை..!

15-01-2022/11.21am

மஹாராஷ்டிரா : மஹாராஷ்டிரா மானியலத்தில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் ஒரு வழக்கிற்காக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

மஹாரஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆர்வி. இங்கு கடம் மகப்பேறு மருத்துவமனை 1990ல் இருந்து இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் குமார்சிங் கடம் அவரது மனைவி ஷைலஜா கடம் மகன் நீரஜ் கடம் மற்றும் மருமகள் ரேகா கடம் ஆகியோர் மருத்துவர்களாக உள்ளனர். இந்த மருத்துவமனை மகப்பேறு மற்றும் நர்சிங் க்ளினிக்காக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 9 அன்று ஒரு பெண் ஆர்வி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 13 வயது மகளை 17 வயது சிறுவன் கற்பழித்துவிட்டதாகவும் தங்களை மிரட்டி ஜனவரி 7 அன்று கடம் மருத்துவமனையில் மகளுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் குறிறிப்பிட்டுள்ளார். அதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். ஜனவரி 10ல் ரேகா கடம் கைது செய்யப்பட்டார்.

`

அவரை தொடர்ந்து நர்ஸ்களான பூஜா தத் மற்றும் சங்கீதா கலே ஆகியோர் ஜனவரி 12 மற்றும் 13ல் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் கருக்கலைப்பிற்கு ரேகா கடம் 30000 வாங்குவதாக தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன.

மருத்துவமனையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயோ கேஸ் பிளான்டில் சிசுக்களை புதைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து அந்த இடத்தை தோண்டியதில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே சிசுக்களின் 54 எலும்புகள் மற்றும் 11 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மருத்துவர் ரேகா மற்றும் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

```
```

அவர்களின் மருத்துவமனைக்கு போலீசார் தற்போது சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

…….உங்கள் பீமா