Monday, December 2, 2024
Home > செய்திகள் > பள்ளி மாணவியை கத்தியால் குத்திய அஷ்ரப் அலியின் மகன்..! லவ் ஜிஹாத்தா..?நெஞ்சை பதற வைத்த வீடியோ..!

பள்ளி மாணவியை கத்தியால் குத்திய அஷ்ரப் அலியின் மகன்..! லவ் ஜிஹாத்தா..?நெஞ்சை பதற வைத்த வீடியோ..!

22-12-21/10.00am

பீகார் : பிஹார் மாநிலம் கோபால்கஞ் மாவட்டம் மஞ்சகர்க் காவல்சரகத்திற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தேறியது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமையன்று கோபால்கஞ் மாவட்டத்திலுள்ள பிரதாப்பூர் கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் அஸ்ரப் அலி மகன் குடா என்பவன் வழிமறித்துள்ளான். சிறுமி எதிர்பாரா நேரத்தில் கத்தியால் பலமுறை குத்தினான். அவனை ஒருவர் தடுத்து இழுத்துக்கொண்டு போகையில் அவரை திமிறிக்கொண்டு மீண்டும் அந்த சிறுமியிடம் நெருங்கினான்.

அவ்வளவு குத்துவாங்கியும் எழுந்து உட்கார்ந்த சிறுமியின் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்தியது அந்த மிருகம். 13 வினாடிகளில் 9 முறை குத்தியுள்ளது அந்த கொலைகார மிருகம். இந்த காட்சிகள் அப்படியே சிசிடிவியில் பதிவாயுள்ளது. மிக ஆபத்தான நிலையில் சிறுமியை கிராமத்தினர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து சிறுமி மேல்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

`

கொலை செய்ய முயற்சி செய்த குடா அந்த சிறுமி வரும் பாதையில் சில சிறுவர்களுடன் நின்றுள்ளான். சிறுமியுடன் வந்த தோழிகள் விலகி சென்றதும் பாய்ந்து போய் கத்தியால் குத்த தொடங்கியுள்ளான். அவனை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தடுக்க முயற்சித்து அவனை இழுத்தார். அவரிடம் திமிறிக்கொண்டு திரும்பி இந்த கோர செயலை நிகழ்த்தியுள்ளான் குடா. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவனை தேடி வருகின்றனர்.

https://twitter.com/Pankajphogat01/status/1473226385942474752?s=20

மேலும் இவன் பல மாதங்களாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் பயனில்லை என சொல்லப்படுகிறது. தனது பாலியல் ஆசைக்கு இணங்காத சிறுமியை கொள்ள முடிவெடுத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக ஊர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

```
```

…..உங்கள் பீமா