Tuesday, December 10, 2024
Home > செய்திகள் > இவ்வளவு தாங்க பாரீஸ்..! இந்திய ஊடகங்கள் சொல்ல மறுக்கும் உண்மை வீடியோவாக..!

இவ்வளவு தாங்க பாரீஸ்..! இந்திய ஊடகங்கள் சொல்ல மறுக்கும் உண்மை வீடியோவாக..!

கடந்த வருடம் பரவிய சீனத்தொற்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி பல கோடி மக்களின் உயிரை குடித்தது. அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. இரண்டாவது வருடமாக சீன தயாரிப்பு ஒன்று வெற்றிநடை போடுகிறது.

ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட இந்தியா மலிவான விலையில் தயாரித்து சந்தைப்படுத்தியதுடன் மக்களுக்கு இலவசமாக கொடுக்க ஆரம்பித்தது. இந்திய ஊடகங்கள் சில வெளிநாட்டு பெருமை பேசிக்கொண்டு இந்தியாவை தரம் தாழ்த்திக்கொண்டிருக்க மேலைநாடுகளில் நிலைமை தலைகீழாக உள்ளது.

பிரான்ஸை பொறுத்தவரை ஜனத்தொகை சராசரி 10 கோடிக்கும் கீழ். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி ஆரம்பித்த சீனத்தொற்றின் ஊழித்தாண்டவம் ஒரு லட்சத்தி இருபதாயிரம் பேர் உயிரை காவு வாங்கியது. கடந்த வருடம் டிசம்பர் கடைசியில் பைசர் கம்பெனியின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. அதையடுத்து 2021 பிப்ரவரி மற்றும் மார்ச்சில் ஆஸ்ட்ரோ ஜெனிக்கா மற்றும் ஜான்சீன் தடுப்பொசிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

`
www.madrastelegram.com

ஆனால் மக்கள் ஆதரவு கொடுப்பதாக தெரியவில்லை. தடுப்பூசி போடவே தயங்குகிறார்கள். சீனத்தொற்றின் தாக்கம் குறையாத போதும் தினம் தினம் உயிர்பலி ஆகும்போதும் மெத்தப்படித்த மக்கள் தடுப்பூசியை தவிர்க்கின்றனர். இதையறிந்த அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

உடற்பயிற்சி கூடங்கள் மால்கள் தியேட்டர்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் மதுபான கூடங்கள் என எங்கு செல்ல வேண்டுமானாலும் உடல்நல ஆரோக்கிய சான்றிதழ் கட்டாயம் என அரசு அறிவித்தது. அதையடுத்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

நாங்கள் மது அருந்துவது எங்கள் உரிமை நாங்கள் என செய்ய வேண்டும் என அரசு தீர்மானிக்க கூடாது எங்களை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமையில்லை என இந்தியாவில் இருக்கும் தாராளவாதிகள் போல குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

```
```

தலைநகர் பாரீசில் எட்டாவது வாரமாக அரசின் அறிக்கையை திரும்ப பெற கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடுகின்றனர். கண்முன்னே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியும் இந்த போராட்டக்காரர்களுக்கு புத்திவரவில்லையே என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwi-yIGaxfnyAhU9wzgGHTA5DNcQFnoECAMQAQ&url=https%3A%2F%2Fwww.statista.com%2Fstatistics%2F1103422%2Fcoronavirus-france-deaths%2F&usg=AOvVaw0qBjlxPGzkqz4iqycC3jjK

..உங்கள் பீமா