மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதே அளவுக்கு மற்றதுறைகளிலும் தனது பங்களிப்பை விஸ்தாரமாக கொடுத்துவருகிறது. ஒவ்வொரு துறையின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என மத்திய அரசு சரியாக புரிந்துகொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளும் அவ்வாறே இருக்கிறது.
அதற்க்கு எடுத்துக்காட்டாட்க இந்த முறை டோக்கியோவில் நடந்த ஒளியம்பிக்கிலும் பாராலிம்பிக்கிலும் இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். பாராலிம்பிக்கில் 19 மெடல்களை இந்தியாவுக்காக பெற்றுத்தந்துள்ளனர் இளம் சிங்கங்கள்.
அவர்களை இன்று பிரதமர் சந்தித்தார். அவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட வெற்றியாளர்கள் நெகிழ்ந்து போயினர். பாரதபிரதமர் மோடி பதவி ஆணவம் இல்லாமல் ஒரு தந்தையை போல அனைத்து வீரர்களுடனும் உணர்ச்சிமேலிட பேசினார்.
அதுவும் இரண்டு மெடல்களை அள்ளிக்கொண்டுவந்த அவானி லெக்ஹாரா உச்சந்தலையை தொட்டு பிரதமர் மோடி பாசமாய் ஆசிர்வதிக்க அவானி லெக்ஹாரா கண்கலங்கினார். இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த கலந்துரையாடலில் பாராலிம்பிக்கில் வெற்றி வாகை சூடிய 19 பேரும் கலந்துகொண்டனர்.
…உங்கள் பீமா