Friday, August 21, 2026
Home > செய்திகள் > கர்நாடகாவில் பரபரப்பு..!பஜ்ரங்தள் உறுப்பினர் படுகொலை..!

கர்நாடகாவில் பரபரப்பு..!பஜ்ரங்தள் உறுப்பினர் படுகொலை..!

21-2-22/10.20am

கர்நாடகா : கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சினை பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிலர் கடுமையாக தாக்கப்பட்டனர். போலீசார் சிலரும் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் ஹிஜாப் மற்றும் காவி துண்டுகள் அணிந்து மாநில அரசு நடத்தும் கல்விநிறுவனங்களில் நுழைய கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. அரசு மானியம் பெரும் அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பஜ்ரங்தள் உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா பாரதி காலனியில் வசிப்பவர் ஹர்ஷா. நேற்று இரவு 9 மணியளவில் அவரை பின்தொடர்ந்து விரட்டிவந்த மர்மநபர்கள் அவரை சராமாரியாக கத்தியால் குத்தி கொன்றனர். சமூகவலைதளத்தில் ஹிஜாப் அணிவதற்க்கு எதிராக பதிவிட்டதால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஷிமோகா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக உள்துறையமைச்சர் அரகா ஜனனேந்திரா இன்று காலை பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ” 4-5 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த படுகொலையின் பின்னால் எந்த அமைப்பு இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஷிமோகா பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சில அடிப்படைவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சினையால் மாநிலத்தின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. மதவாத சக்திகளிடம் நாம் கவனமாக இருக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார். இதனிடையே சிம்மோகா பகுதியில் காவல்துறையினர் மார்ச் நடத்தி வருகின்றனர்.

…..உங்கள் பீமா