Monday, September 14, 2026
Home > செய்திகள் > மாணவி தற்கொலை விவகாரம் அண்ணாமலை அதிரடி..! தஞ்சாவூர் எஸ்பி விளக்கம்..!

மாணவி தற்கொலை விவகாரம் அண்ணாமலை அதிரடி..! தஞ்சாவூர் எஸ்பி விளக்கம்..!

20-1-22/ 21.00pm

அரியலூர் : மதம் மாற கட்டாயப்படுத்தியதால் மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. இதுகுறித்து தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறுகையில் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை தனது அறிக்கையில் “ஏழை விவசாயி மகள் லாவண்யா வயது 17, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும்.
நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

மதமாற்றம் தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இதற்கு மாநில அரசு கவனம் செலுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இளைஞரணி சார்பில் தஞ்சாவூரில் அடுத்த மூன்று தினங்களுக்குள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என தஞ்சை எஸ்.பி. ரவளி பிரியா செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

….உங்கள் பீமா