8-12-21/10.06am
உத்திரபிரதேசம் : முன்னாள் ஷியா வக்ப் போர்டு தலைவரான வாசீம் ரிஸ்வி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திலிருந்து தாய்மதமான் இந்து மதத்திற்கு திரும்பினார். அதையடுத்து அவரது செயலுக்கு ஏகோபித்த பாராட்டுக்கள் குவிந்தன. அதே சமயத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பலர் கண்டன குரலை எழுப்பினர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ரிஸ்வியின் தலைக்கு அம்பது லட்சம் பரிசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் பல மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தஸ்தை இழந்திருக்கிறது. மேலும் நாட்டின் தேசிய கட்சி என்கிற அந்தஸ்தை விரைவில் இழக்கும் தருவாயில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

காங்கிரஸ் மதவாத அரசியலை மற்றும் சாதிய ரீதியான அரசியலை கையிலெடுத்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். அதற்கேற்றாற் போல அதன் தலைவர்களும் மதரீதியாக பேசி சர்ச்சைகளை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஹைதராபாத் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவருமான முஹம்மது பெரோஸ்கான் பேசியது இப்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
” நீங்கள் ரிஸ்வியை எங்கு பார்த்தாலும் கொன்று விடுங்கள். அதற்காக ஐம்பது லட்சம் ரொக்கப்பணம் நான் தருகிறேன். மேலும் கொலை செய்பவரின் வழக்குக்கான முழு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் வீடியோவில் பேசி இணையத்திலும் வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர்களான ராகுல் மற்றும் ப்ரியங்கா இதுகுறித்து எந்த ஒரு கருத்தும் கூற மறுத்திருப்பது அவர்களின் உண்மையான உள்நோக்கத்தை காண்பிப்பதாக அமைந்துள்ளதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா