Saturday, August 22, 2026
Home > செய்திகள் > யேசுவால் அனுப்பப்பட்ட கோரேஸ் ராஜா எங்கள் முதல்வர் முக ஸ்டாலின்…!

யேசுவால் அனுப்பப்பட்ட கோரேஸ் ராஜா எங்கள் முதல்வர் முக ஸ்டாலின்…!

18-2-22/16.50pm

சென்னை : தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவரான முக.ஸ்டாலின் அவர்களை கிறித்தவ மக்களை பாதுகாக்க வந்த பாதுகாவலன் என பெந்தேகோஸ்தே திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியார் கிருத்தவ மேடையில் பாராட்டி பேசினார்.

தமிழகத்தில் ஹிந்துக்களின் கோவில்கள் ஒருபுறம் இடிக்கப்பட்டும் மறுபுறம் போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்தும் அரசின் இரும்புக்கரம் கொண்டு அனைத்தையும் அடக்கி சிறந்த முதல்வராக இருப்பவர் எங்கள் தளபதி என திமுகவினர் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒருவர் ” சிறுபான்மையினராகிய எங்களை காக்க யேசுவால் அனுப்பப்பட்ட கோரேஸ் ராஜா நமது தமிழக முதல்வர். எங்களை காக்க கிறித்தவ நலவாரியம் அமைத்துக்கொடுத்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.தமிழகத்தில் ஐம்பதாயிரம் பெந்தகொஸ்தே திருச்சபைகள் இருக்கின்றன. அவற்றில் அறுபது லட்சம் அங்கத்தினர் இருக்கின்றனர்.

https://twitter.com/MadrasTelegram/status/1494628961833209856?s=20&t=p-cns2zwg5jzzh9hQTEojw

எங்களது கோரிக்கைகைகளை நிறைவேற்றும்படியாக கிறித்தவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும்படியாக கட்டி முடிக்கப்படாத பல தேவாலயங்களை மீண்டும் எழுப்ப ஏசுவே உங்களை அனுப்பியிருக்கிறார்.வருகிற உள்ளாட்சி பேரூராட்சி மற்றும் எந்த தேர்தலாக இருந்தாலும் உங்களுக்கு பெந்தேகோஸ்தே சபையினர் உறுதுணையாய் இருப்பார்கள்” என கூறியுள்ளார்.