Saturday, July 27, 2024
Home > அரசியல் > அடுத்தடுத்து கைது செய்யப்படும் பிஜேபி தலைவர்கள்…!? பழி வாங்குகிறதா திமுக..??

அடுத்தடுத்து கைது செய்யப்படும் பிஜேபி தலைவர்கள்…!? பழி வாங்குகிறதா திமுக..??

8-12-21/ 6.07am

சென்னை : பிஜேபி பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அரசியல் வட்டத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது திமுவின் பழிவாங்கும் நடவடிக்கை என பிஜேபியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு இணையதள பதிவிற்க்காக பிஜேபி பிரமுகர் திரு.கல்யாணராமன் நள்ளிரவில் காவல்துறையினரால் அராஜகமாக கைது செய்யப்பட்டார். கேள்வி எழுப்பிய பிஜேபி பெண் தலைவர் கீழே தள்ளப்பட்டார். மேலும் சில நாட்கள் முன்னர் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.காந்தி சிறையிலடைக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டார்.

கடந்தவாரம் அரியலூர் மாவட்ட பிஜேபி தலைவரும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இப்படி அடுத்தடுத்து பிஜேபியினர் மட்டுமே குறிவைத்து கைது செய்யப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பிஜேபி ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டடுள்ளார். இதுகுறித்து பிஜேபி தலைவரான கருப்பு முருகானந்தம் கூறுகையில்,

`

“திமுக அரசு தவறுகளை சுட்டிக்காட்டி போராடுபவர்களையும் பொய் வழக்குகளின் மூலமாகவும் காவல்துறையின் அச்சுறுத்தலின் மூலமாகவும் முடக்கி விடலாம் என்று நினைத்து செயல்படுகிறார்கள், கடந்த வாரம் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு குறைக்காததை கண்டித்து போராட்டம் நடத்திய.பாஜக மாநில OBC அணி துணைத் தலைவர் திரு.அகோரம் அவர்களை கைது செய்து பிணையில் வரமுடியாத வழக்குகளை பதிவு செய்தனர்.

```
```

பாஜக வழக்கறிஞர் பிரிவினர் சிறப்பான வாதத்தினாலும் தலைவர்களின் முயற்சியின் காரணமாகவும் அவரை சிறை செல்லாமல் வெளி கொண்டு வந்தோம் மீன்டும் அரியலூர் மாவட்ட தலைவர் திரு.ஐயப்பன்அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்,இன்று அவர் சிறையிலிருந்து வெளி கொண்டு வரப்பட்டார், பாஜகவினரை வழக்குப்பதிவு செய்து அச்சுறுத்தி விடலாம் என்று திமுக அரசு நினைக்கிறது, வழக்குகளைப் பார்த்து பாஜகவினர் வெகுண்டு எழுவார்களே தவிர பயந்து விடமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா