21-11-21/7.30am
திருச்செங்கோடு : கோஷ்டி பூசலில் திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் சராமரியாக தாக்கிக் கொண்டதில் சிலர் காயமடைந்தனர்.
திருச்செங்கோடு திமுக இரண்டு கோஷ்டியாக செயல்பட்டு வருகிறது. திமுக முன்னாள் தலைவர் நடேசன் ஒரு கோஷ்டியும் நகர செயலாளர் தாண்டவன் கார்த்தி ஒரு கோஷ்டியும் என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்த இரு கோஷ்டிக்கும் இடையே பணப்பட்டுவாடா மற்றும் ஆக்கிரமிப்பு நில தகராறு மற்றும் வாக்காளர்கள் பணம் கையாடல் என பல்வேறு கருத்து மோதல்கள் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் திருசெங்கோடு திமுக அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் நேற்று இரு கோஷ்டிக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய திருச்செங்கோடுவாசி ஒருவர் ” சார் கமிஷன் பிரிச்சுக்கறதுல தகறாரா இருக்கலாம் சார். பழைய தலைவர் நடேசனை நகர செயலாளர் தாண்டவன் கார்த்தி மதிக்க மாட்டாரு சார். கோவில்ல இப்போ அறங்காவலர் போஸ்டிங் ஆளு எடுக்கறாங்க. அதுல எனக்கு வேணும் உனக்கு வேணும்னு ஆரம்பிச்ச பிரச்சினை இப்போ கைகலப்பாயிடுச்சு.
கோவில்ல போஸ்டிங் கிடைச்சுட்டா நகையெல்லாம் கொஞ்சம் அமுக்கிக்கலாம்ல சார்.” என தெரிவிக்கிறார். திமுக தலைமை இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கைகள் எடுத்து கட்சியின் பெயரை என்பதே அடிமட்ட திமுக தொண்டனின் கருத்தாக உள்ளது.
….உங்கள் பீமா