Thursday, March 28, 2024
Home > அரசியல் > தன்மானத்திற்கு இழுக்கு..! திராவிட ஸ்டாக்கை கிழித்தெறிந்த டாக்டர் கிருஷ்ணசாமி

தன்மானத்திற்கு இழுக்கு..! திராவிட ஸ்டாக்கை கிழித்தெறிந்த டாக்டர் கிருஷ்ணசாமி

30-4-22/11.45AM

சென்னை : தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மக்கள் விவாதமேடை நிகழ்ச்சியில் பங்குபெற்ற புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி திராவிட மாடல் பற்றிய தனது கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்தார்.

அவர் பேசியதாவது ” அடுத்த பத்தாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் அடுத்த நூறாண்டுகளுக்கும் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வந்துவிடக்கூடாது என்பதற்க்காக பேசப்படும் சொல்லாடல் தான் திராவிட ஸ்டாக். அதற்காக பின்னப்பட்ட வலை தான் திராவிட மாடல். அதை முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். இந்திய தேசத்திலிருந்து தமிழகத்தை பிரிப்பதற்கான சொல்லாடல் தான் திராவிட ஸ்டாக்.

விலகிப்போனவர்கள் நீங்கள்தான். நான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள். இந்தியா ஒரு தேசமா இல்லையா. ஏன் அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை. மேற்குவங்கம் ஏன் வளர்ச்சியடையவில்லை உத்திரபிரதேசம் ஏ வளர்ச்சியடையவில்லை என கேட்கிறீர்களே அவர்கள் சந்தித்த எந்த கொடுமையாவது நாம் சந்தித்திருக்கிறோமா.

நாம் இங்கு சுதந்திரமாக வாழ காரணம் அங்கே வடக்கில் இருக்க கூடியவர்கள் செய்த தியாகம். நாடு கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என பிரிந்தபோது சந்தித்த உயிரிழப்புகள் ஏராளம். நாம் ஏதாவது உயிரிழப்பை சந்தித்தோமா. ஆங்கிலேயர்கள் அடித்த கொள்ளையிலிருந்து இஸ்லாமியர்கள் படையெடுப்பிலிருந்து இன்னும் மீண்டு வர வடக்கே இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். வடக்கர்கள் இல்லையெனில் இந்தியா என்பது கிடையாது.

`

அவர்கள் இல்லையெனில் நாம் இல்லை. நாம் தமிழர் என்றோ திராவிடர் என்றோ சொல்லிக்கொள்ள முடியாது. இன்று நாம் நிம்மதியாக இருக்க யார் யாரோ தியாகம் செய்திருக்கிறார்கள். எனவே இந்தியாவிலிருந்து பிரிப்பதை உள்ளேவைத்துக்கொண்டு திராவிடமாடல் பேசாதீர்கள். இந்த திராவிட மாடல் உள்ளே ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன என்று சொன்னால் தந்திரமாக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பிரிக்க நினைக்கிறீர்கள்.

பிரிவினைக்கு வித்திடுகிறீர்கள். அதை வளர்த்தெடுக்கிறீர்கள். அதுவே உங்கள் சிந்தனையாக இருக்கிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் தமிழன் ஆளக்கூடாது. ஒருகுடும்பம் மட்டுமே ஆளவேண்டும். அப்பா முதலமைச்சர். மீண்டும் அடுத்து வரக்கூடியவர்களும் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டும் என்பதற்க்காக பேசப்படுவதே திராவிட மாடல். இந்த மாடலால் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

```
```

தமிழ்நாடு ஏதாவது வளர்ச்சி பெற்றதென்றால் அது தேசிய கட்சியான காங்கிரஸோ ஜனதாவோ பாரதிய ஜனதாவோ மற்ற கட்சிகளோ இருந்தபோதுதான் வளர்ச்சிபெற்றிருக்கிறதே தவிர மாநிலக்காட்சிகளால் ஒருவளர்ச்சியும் அடையவில்லை. தமிழகம் தேசியத்தோடு இணையவேண்டும் என சொன்னால் எஸ்.ஆகிவிட்டார்கள். ஹிந்துமுன்னணி ஆகிவிட்டார்கள் என கூறுகிறீர்கள் என்றால் உங்கள் பார்வையில் கோளாறு இருக்கிறது என அர்த்தம்.

பிஜேபி என்பது வேறு தேசியம் என்பது வேறு என்பதை உணர்ந்துகொண்டால்தான் நீயும் இருக்கமுடியும். நானும் இருக்கமுடியும். உன்னுடைய கட்சியும் இருக்கமுடியும்.என்னுடைய கட்சியும் இருக்கமுடியும். எனவே தேசத்திற்கு ஊறுவிளைவிக்கும் திராவிட சிந்தனையை விட்டுவிட்டு தமிழக மக்களுக்காக பாடுபடும் சிந்தனையோடு வாருங்கள். நாம் ஒன்றிணைந்து செயல்படலாம். இணைந்து பணியாற்றலாம்.

தமிழ்நாடு தேசியத்தோடு இணைய தயாராய் இருக்கிறது திராவிடம் அகற்றப்படும் தேசிய சிந்தனை தான் நம்மை முன்னேற்றும். திராவிடம் என்றுமே இழுக்குதான். தமிழனாக இருங்கள்.இந்தியனாக இருங்கள்” என உரையாற்றினார். மேலும் இந்த மேடையில் நாஞ்சில் சம்பத் மற்றும் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

…..உங்கள் பீமா