20-11-21/20.10pm
சென்னை : இந்தியா பற்றிய அபாண்டமான பொய்க்கருத்தை கூறிய சன் குழுமம் மீது மத்திய அமைச்சர் முருகன் நடவடிக்கை எடுப்பாரா என கேள்விகள் எழுந்துள்ளது.
கடந்த நவம்பர் 16 அன்று PTI நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.அதில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அறிக்கையில் சிறிய அல்லது பெரிய தீவிரவாத தாக்குதல்கள் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து இடங்கள் மால்கள் சந்தைகள் அரசுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற வாய்ப்பிருப்பதால் அமெரிக்க மக்கள் கவனமுடன் செல்லவேண்டும்” என லெவல் 2 லெவல் 3 என குறிப்பிட்டு சொல்லப்பட்டிருந்தது.
இந்த செய்தியை திமுகவுக்கு சொந்தமான சன் குழும சன் செய்திகள் குறிப்பிடுகையில் ” டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அமெரிக்க பெண் சுற்றுலா பயணிகள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டாம்” என செய்தியின் கூற்றையே மாற்றி திரித்து,
இந்தியாவுக்கு உலக நாடுகளின் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியர்களால் பணம் சம்பாதித்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக இப்படி கருத்துக் கூறும் செய்தி நிறுவனங்களை முடக்கி அதன் லைசென்ஸை செல்லாததாக்க வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…….உங்கள் பீமா