Saturday, October 5, 2024
Home > செய்திகள் > அன்னூரை அடுத்து தூத்துக்குடி..? கையகப்படுத்தப்படும் 1500 ஏக்கர் நிலம்..?

அன்னூரை அடுத்து தூத்துக்குடி..? கையகப்படுத்தப்படும் 1500 ஏக்கர் நிலம்..?

13-12-21/11.04am

தூத்துக்குடி : கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் விவசாய நிலைகள் 3300 ஏக்கர்கள் விவசாய நிலங்களை தொழிற்பூங்கா அமைக்க அரசு கையகப்படுத்த இருக்கிறது. அதற்கு தமிழக பிஜேபி கடும் கண்டனத்தை பதிவு செய்து விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் அருகே அரசு 1500 ஏக்கர் நிலத்தை கையகபடுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இதனை அறிவித்துள்ளார். தமிழ்நாடு இண்டஸ்ட்ரீஸ் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் லோன் மேளா நடைபெற்றது.

அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் காற்றாலை உதிரிபாகங்கள் தயாரிக்கவும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கவும் சிப்காட் அருகில் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருப்பதாக தெரிவித்தார். தொழிற்சாலைகள் அமைவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

`

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எந்த ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதே போல சுற்று சூழல் ஆள்வளர்களும் தொடர்எதிர்ப்பை தெரிவவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு அமைப்பினர் மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் இழுத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

```
```

இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு சுற்று சூழல் ஆர்வலர்கள் மற்றும் போராளிகள் எந்த விதமான எதிர்வினை ஆற்றப்போகிறார்கள் என்பது வரும்காலங்களில் தெரியும் என தூத்துக்குடி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா