22-11-21/ 19.57pm
கோயம்புத்தூர் : தமிழக முதல்வர் இன்று கோயம்புத்தூர் சென்று பல புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பிஜேபி கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கீழே இருக்கை தயார் செய்து விட்டு முதல்வர் வந்ததும் மேடைக்கு வரவைத்து உக்காரவைத்தது திமுகவின் அரசியல் நாடகம் என சர்ச்சை எழுந்துள்ளது.
இன்று கோயம்புத்தூர் சென்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக இணையத்தில் #GOBACKSTALIN என ஹேஸ்டேகிட்டு ட்ரெண்டானது. திமுக ஐடி விங் தரப்பில் வெல்கம் ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்திருந்தாலும் அகில இந்திய அளவில் #GOBACKSTALIN முன்னணியில் இருக்கிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் சென்ற முக ஸ்டாலின் வஉசி மைதானத்தில் மக்களிடையே உரையாற்றினார். பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி 25,123 பயனாளிகளுக்கு 645 கோடி அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இங்கு தான் திமுகவின் நாடகம் ஆரம்பமானதாக கோயம்புத்தூர் பிஜேபியினர் விமர்சிக்கின்றனர்.
எந்த ஒரு முதல்வரும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும்போது அந்த சட்டமன்ற உறுப்பினரே வரவேற்பது வழக்கம். ஆனால் அந்த மரபு மீறப்பட்டுள்ளது. மேலும் வானதி அவர்கள் இருக்கை போடப்பட்டதும் அந்த காலியான இருக்கையை படம் எடுத்து வானதி சீனிவாசனை காணவில்லை என திமுக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டு புளகாங்கிதமடைந்தது.
இந்நிலையில் முதல்வர் வந்ததும் வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்து உட்காரவைத்தார். இது அப்பட்டமான அரசியல் நாடகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா