22-11-21/16.56pm
கரூர் : கரூரில் காவல் ஆய்வாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. திமுக ஆட்சியில் தொடர்ந்து காவலர்கள் கொல்லப்படுவது தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்தவர் கனகராஜ். இவர் இன்று காலை வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வேன் ஒன்று வேகமாக வந்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்த ஆய்வாளர் கனகராஜ் முயன்றுள்ளார். அந்த வேனின் ட்ரைவர் வண்டியை நிறுத்தாமல் அவர் மீது மோதிவிட்டு வேகமாக சென்றிருக்கிறது.
வேன் மோதியதால் பலத்த காயமடைந்த கனகராஜை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர்.துரதிர்ஷ்டவசமாக போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து நடக்கும் காவலர் கொலைகளால் தமிழகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா