27-12-21/11.53am
சென்னை : இதுவரை இந்துக்களின் கோவில்களுக்கு வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு மானியத்தை முதல்வர் முக ஸ்டாலின் அதிகரித்து அதற்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இந்துக்களின் கோவில்கள் தேவஸ்தானங்கள் அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகின்றன. கோவில்களில் வருகின்ற வருமானம் பொது சேம நிதி என்கிற பெயரில் அரசு எடுத்துக்கொள்கிறது. இதனால் பல கோவில்கள் புனரமைப்பு பணி நடைபெறாமல் பராமரிப்பு சரிவர செய்யமுடியாமலும் நிர்வாகங்கள் திணறிவந்தன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியத்தை ரூ. 3 கோடியிலிருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையையும் இன்று வழங்கினார்.
….ஆய்ஷா ரஹுமான்