Monday, December 2, 2024
Home > அரசியல் > வாயை கொடுத்த வயநாடு பல் டாக்டர்..! வைத்தியம் பார்த்த நெட்டிசன்கள்..!

வாயை கொடுத்த வயநாடு பல் டாக்டர்..! வைத்தியம் பார்த்த நெட்டிசன்கள்..!

21-12-21/15.13pm

இந்தியா : பல் மருத்துவரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான ஷாமா முஹம்மது மத்திய பிஜேபி அரசின் மீது அடுக்கடுக்கான பொய்யான புகார்களை கூறினார். அவருக்கு நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்.

வயநாட்டை சேர்ந்தவர் பல் மருத்துவர் ஷாமா முஹம்மது. இவரை இந்திய தேசிய காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளராக ராகுல் காந்தி நியமித்தார். அப்போதே கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அனுபவமில்லாத இளம்பெண்களை குறிவைத்து கட்சியில் அங்கீகாரம் கொடுக்கிறார் என கட்சியின் மூத்த தலைவர்கள் முணுமுணுத்தனர்.

அதே போல ப்ரியங்கா காந்தியிடம் நீங்கள் ஏன் திடீரென அரசியல் பிரவேசம் செய்தீர்கள் என கேள்வியெழுப்பியதற்கு காங்கிரசில் நிர்வாகிகள் சரியில்லை அதனால் மக்களை காக்க நான் அரசியலுக்குள் நுழைந்தேன் என கூறினார். அதோடு விடாத நிருபர்கள் அடுத்த சந்திப்பில் அதுதான் ராகுல் காந்தி இருக்கிறாரே. அவரது நிர்வாக திறன் சரியில்லையா என துளைத்தெடுத்தனர். அதைப்பற்றி கருத்து கூற விரும்பவில்லை என மழுப்பலாக பதிலளித்தார் ப்ரியங்கா.

`

இப்படி உட்கட்சி தலைமைக்குள்ளேயே பூசல் நிலவிக்கொண்டிருக்க ஷாமா மத்திய பிஜேபி அரசு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.” இந்த 2020-21 ல் மட்டும் பெட்ரோல் டீசல் வரி மற்றும் செஸ் மூலமாக 4.55கோடி வசூல் செய்துள்ளது. இவ்வளவு நிதியை வைத்து என்ன செய்கிறது பிஜேபி. இதே அரசு தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க நிதி இல்லை என நீதிமன்றத்தில் நீலிக்கண்ணீர் வடித்தது” என கூறியுள்ளார்.

```
```

இதற்க்கு பதிலளித்த நெட்டிசன்களில் ஒருவர் “49% வரி அந்தந்த மாநிலங்களுக்கு நிதிக்குழு 14 வது ஷரத்தின்படி பிரித்துக் கொடுக்கிறது. மேலும் உங்கள் ஆட்சியில் வாங்கப்பட்ட இரண்டுலட்சம் ஆயில் பாண்டுகளுக்கான கடனை இந்த பிஜேபி அரசு திரும்ப கொடுத்துக் கொண்டிருக்கிறது” என பளிச்சென பதிலளித்துள்ளார்.

….உங்கள் பீமா