Saturday, July 27, 2024
Home > செய்திகள் > முதல்வர் யோகியுடன் கங்கனா ரனாவத் திடீர் சந்திப்பு..!

முதல்வர் யோகியுடன் கங்கனா ரனாவத் திடீர் சந்திப்பு..!

தேசிய சிந்தனை கொண்ட கங்கனா ரனாவத் நேற்று திடீரென உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் யோகி அவர்கள் கங்கானாவிடம் ராமர் கோவிலுக்கு வரவேண்டும் என கூறினார்.

அதற்க்கு கங்கனா உங்கள் ராம ராஜ்ஜியம் தொடரவேண்டும் என பதிலளித்தார். அந்த சந்திப்பின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து துணை தலைமை செயலாளர் நவநீத் சேகல் தனது ட்விட்டரில் “ஒன் டிஸ்ட்ரிக்ட் ஒன் ப்ராடக்ட் என்ற திட்டத்தின் விளம்பர தூதுவராக உத்திரபிரதேச அரசு கங்கனாவை நியமித்திருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் யோகியின் வளர்ச்சித்திட்டமான ஒன் டிஸ்ட்ரிக்ட் ஒன் ப்ராடக்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட பழமையான நிறுவனங்களின் உற்பத்தி திறனை பெருக்குவதாகும். மாநிலத்தில் 75 இடங்களில் அதற்க்கான தொழில் மையத்தை யோகி அரசு உருவாக்க இருக்கிறது.

`

இதனால் வேலைவாய்ப்பு பெருகும் என கூறப்படுகிறது. வெகுவிரைவில் உத்திரபிரதேசம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

```
```
https://twitter.com/MadrasTelegram/status/1444204289841262600?s=20

…..உங்கள் பீமா